அங்கிள் ஆன்டெனா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடை இருக்கிறது. பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரையும் சேர்த்து எடை போட்டால் எவ்வளவு கிலோ தேறுவார்கள்....?
அங்கிள் ஆன்டெனா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடை இருக்கிறது. பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரையும் சேர்த்து எடை போட்டால் எவ்வளவு கிலோ தேறுவார்கள்....?

பதில்: ஒரு பெரிய தராசில் உலக மக்கள் அனைவரையும் ஒரு தட்டில் நிறுத்தி வைத்து எடை போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? இது முடியாத காரியம்தான். ஆனால் லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் டாபிக்கல் மெடிசின் என்ற நிறுவனம் இதை வேறுவிதமாகச் செய்து முடித்து ஒருகணக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி... உலகில் உள்ள மக்கள் அனைவரும் உருவத்திலும் எடையிலும் வெவ்வேறானவர்கள் அல்லவா? ஆகவே பல்வேறு விதமான கணக்குகளைப் போட்டு சராசரி மனிதனின் எடை 62 கிலோ என்ற முடிவுக்கு வந்தார்கள். இதில் ஒல்லி மனிதர்களும் குண்டு மனிதர்களும் குழந்தைகளும் இளைஞர்களும் என எல்லோரும் அடக்கம். இதை வைத்து மொத்த உலக மக்கள்தொகைக் கணக்கைப் பெருக்கிப் பார்த்தால் உலக மக்களின் மொத்த எடை 316 மில்லியன் டன் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆக உலக மக்களின் மொத்த எடை 316 மில்லியன் டன். மக்கள் தொகை கூடக் கூட இந்த எடையும் கூடிக்கொண்டே போகும். பூமி தாங்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com