அங்கிள் ஆன்டெனா

உலகின் மிகப் பெரிய விலங்கினத்தைச் சேர்ந்த யானைக்கு இருக்கும் வித்தியாசமான உறுப்புகள் அதன் தும்பிக்கை,
அங்கிள் ஆன்டெனா


கேள்வி: யானைகளுக்கு மட்டும் ஏன் அவ்ளோ பெரிய காதுகள்?

பதில்: உலகின் மிகப் பெரிய விலங்கினத்தைச் சேர்ந்த யானைக்கு இருக்கும் வித்தியாசமான உறுப்புகள் அதன் தும்பிக்கை, கொம்புகள் மற்றும் காதுகள். சரி, இந்தக் காதுகள் ஏன் இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? 
சில யானைகளின் காதுகள் 22 சதுர அடி நீளம் வரை இருக்கும். இந்தக் காதுகள் அதன் கேட்கும் திறனை அதிகரிப்பதில்லை. எல்லோருக்கும் கேட்பது போலத்தான் அதற்கும் கேட்கும். இந்தக் காதுகளின் சிறப்பம்சம்:  யானையின் உடலைக் கூலாக அதாவது குளிர்ச்சியாக வைத்திருப்பதற்குத்தான் இவ்ளோ பெரிய காதுகள்!

சாதாரணமாக யானைகள் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற மிகவும் வெப்பமான பிரதேசங்களில் வாழ்கின்றன.யானை இருக்கும் சைசுக்கு (அளவுக்கு) எப்போதும் குளிர் காற்று வீசினால்தான் அதன் உடம்பைக் குளிர்ச்சியாக, வெப்பத்தினால் ஏதும் பாதிப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள முடியும். வெப்ப பிரதேசங்களில் இந்தச் சலுகை யானைக்குக் கிடைப்பதில்லை. மேலும் நீருக்குள் இறங்கி தண்ணீரை வாரி இறைத்து உடம்பைக் குளிரச் செய்து கொள்ளவும் வெப்பமான இடங்களில் நீர் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

ஒரே வழி, பெரிய விசிறிதான். அந்த விசிறியாகப் பயன்படுகிறது யானையின் காதுகள். அதனால்தான் யானை எப்போதும்  தனது காதுகளை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தனது உடம்பின் வெப்ப நிலையைச் சமன்படுத்திக் கொள்கிறது யானை.

மேலும் நீரைக் கண்டால் யானைக்குக் கொண்டாட் டம்தான். நீங்களே பார்த்திருப்பீர்கள் படங்களில்,  யானை தனது தும்பிக்கையால் நீரை உறிஞ்சி தனது மேலே பீய்ச்சியடித்துக் கொண்டிருக்கும் காட்சியை..
- ரொசிட்டா

அடுத்த வாரக் கேள்வி பசுக்களால் நீச்சல் அடிக்க முடியுமா?

பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com