நினைவுச் சுடர் ! மன்னிப்பில் கிடைத்த நிம்மதி!

பாபு ராஜேந்திர பிரசாத் நம் நாட்டில் முதல் ஜனாதிபதி. அவரை ராஜன் பாபு என்று அன்புடன்
நினைவுச் சுடர் ! மன்னிப்பில் கிடைத்த நிம்மதி!



பாபு ராஜேந்திர பிரசாத் நம் நாட்டில் முதல் ஜனாதிபதி. அவரை ராஜன் பாபு என்று அன்புடன் அழைப்பர். அவர் பதவியில் இருந்தபோது யாரோ ஒருவர் தந்தத்தினாலான பெüன்டன் பேனா ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். ராஜன் பாபுவுக்கு அந்தப் பேனா மிகவும் பிடித்திருந்தது! எப்பொழுதும் அந்தப் பேனா அவர் மேஜை மீது இருக்கும். அவர் எதை எழுதவேண்டுமானாலும், எதில் கையெழுத்திடுவதானாலும்  அந்தப் பேனாவையே பயன் படுத்தினார். 

 அவரிடம் "துளசி' என்னும் வேலைக்காரன் பணியாற்றிக் கொண்டிருந்தான். துளசி சற்று அஜாக்கிரதையாக இருப்பவன். பல சமயங்களில் பல சாமான்களை கை தவறி உடைத்திருக்கிறான். 

 ஒரு நாள் அவன்  ராஜன் பாபுவின் மேஜையைத் துடைக்கும்போது அந்தத் தந்தப் பேனா தவறிக் கீழே விழுந்துவிட்டது! விழுந்ததும் பேனா இரண்டாக உடைந்து விட்டது! பேனாவில் இருந்த மசியெல்லாம் தரையில் சிந்திற்று.

 இதைப் பார்த்ததும் ராஜன் பாபுவுக்கு துளசி மீது கோபம் வந்தது. உடனே காரியதரிசியைக் கூப்பிட்டு ""துளசியை இந்த வேலையை விட்டு நீக்கி, வேறு ஏதாவது வேலை கொடுங்கள்'' என்றார். அதன்படி துளசிக்கு ராஷ்டிரபதி பவனிலேயே இன்னொரு வேலை கொடுத்தார் காரியதரிசி.

 துளசி சென்ற பிறகு ராஜன் பாபுவுக்கு மனது சரியாக இல்லை. "தவறிப்போய் பேனா விழுந்து விட்டால் அவன்  என்ன செய்வான்.... பாவம்' என்று நினைத்தார்.  அன்று முழுவதும் அவரது மனது சரியான நிலையிலேயே இல்லை. 

 மாலையானதும் துளசியை அழைத்து வரும்படி சொன்னார். துளசி வந்ததும், ராஷ்டிரபதி எழுந்து நின்றார். தன் கைகளைத் துளசியின் முன் கூப்பினார். 
 ""துளசி, என்னை மன்னித்து விடு! நான் உன்னைக் கோபித்துக் கொண்டது தவறு!'' என்று சொன்னார்.

 துளசிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நின்றான். நாட்டின் ஜனாதிபது ஒரு சாதாரண வேலைக்காரனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நிற்பதைப் பார்த்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! 

 ""துளசி, என்னை மன்னித்தேன் என்று சொல்ல மாட்டாயா?'' என்று மறுபடியும் கேட்டார் ராஜன் பாபு.  

 துளசியின் கண்களில் நீர் வழிந்தது. வேறு வழியின்றி , ""மன்னித்தேன்!'' என்று அவன் கூறினான். 

  ""இப்போதுதான் எனக்கு நிம்மதியாயிற்று!'' என்று பெருமூச்சு விட்டார் ராஜன்பாபு. துளசியை அன்புடன் அணைத்து மீண்டும் தம் வேலைக்காரனாக அமர்த்திக்கொண்டார் பாபு ராஜேந்திர பிரசாத்!

- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com