அப்பாஸ் மந்திரிக்கு ஒரு சபாஷ்!

 கொடுத்த கடனை மறக்கும் காலம்! எடுத்த பொருளை விரும்பும் காலம்!
 அப்பாஸ் மந்திரிக்கு ஒரு சபாஷ்!

பாராட்டுப் பாமாலை! 67
 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
 கொடுத்த கடனை மறக்கும் காலம்!
 எடுத்த பொருளை விரும்பும் காலம்!
 அடுத்த வீட்டு நெய் ணணக்குதென்பர்!
 எனினும் "அப்பாஸ் மந்திரி' போன்றோர்...
 
 இருப்பதால்தான் இவ்வுலக இயக்கமே!
 "முகமது பசுருதீன்' சென்ற பைக்கில்
 தொகையும் அதிகம் வைத்திருந்தார்
 விரைந்த பயணத்தில் பணப்பை விழுந்தது!
 
 விழுந்த இடம் ஆலங்குடிச் சாலை
 நழுவிய கைப்பொருள் நட்டம்தானே!
 அவ்வழி வந்த அப்பாஸ் மந்திரி
 அவ்விடம் பணப்பையைத்தான் பார்த்தார்!
 
 நறுக்கென எடுத்து எண்ணிப் பார்த்தார்!
 அறுபத்தோராயிரம் பணம்! -- அசந்தாரா?
 சுறுசுறுப்பானார்! வாழ் மங்கலத்து
 சோதனைச் சாவடியில் ஒப்படைத்தார்
 
 சாதனைச் செம்மல் சரித்திரம்தான்
 திட்டச்சேரி காவல் ஆய்வாளர்!
 விட்ட பணத்துடன் தொலைபேசியின்
 எண்ணையும் கண்டார் தொடர்பு கொண்டார்!
 
 கண்கலங்கி, பண இழப்போடு
 தகுந்த விசாரணைக்குப் பின் தொகையும்
 முகமது பசுருதீனுக்குச் சேர்ந்ததே!
 நாகை கண்காணிப்பாளர்
 
 நேரில் அழைத்து நெஞ்சங்குளிர்ந்து
 ஒப்புடன் முகமலர்ந்தும் உபசரித்தே
 அன்புடன் அரும் செயலைப் புரிந்த
 அப்பாஸ் மந்திரியைப் பாராட்டினாரே!
 புலவர் சு . மாரிமுத்து
 இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
 அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com