கடி

கடி

"நேத்து கல்யாண விருந்துக்குப் போனோம்!..... சாதம் குழைஞ்சு போய் களி மாதிரி இருந்திச்சு!''

• "நேத்து கல்யாண விருந்துக்குப் போனோம்!..... சாதம் குழைஞ்சு போய் 
களி மாதிரி இருந்திச்சு!''
"ஒ!.... அப்போ "களியாண' 
விருந்துன்னு சொல்லு!''
கோ.சாய் வினோத் சித்ரா, 
கிருஷ்ணாபுரம்.

• "அந்த மரம் டிகிரி வாங்கின மரம்!''
"எப்படி சொல்றே?''
"அதுதான் "பட்ட' மரமாச்சே!''
எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சி.

• "கேள்விக்குப் பதில் தெரியலே!''
"என்ன செஞ்சே?.... 
கேள்வியை விட்டுட்டியா?''
"பதிலை விட்டுட்டேன்!''
ஏ.நாகராஜன், பம்மல்.

•"கலா, துணி துவைக்கிற 
சோப்பு இருக்கா?''
"துணி துவைக்கிற சோப்பெல்லாம் இல்லே.... சோப்பை 
வெச்சு நீதான் துணி துவைக்கணும்!'' 
நா . வினோத்குமார், 427, அண்ணா தெரு, பாராஞ்சி, அரக்கோணம், 
இராணிப்பேட்டை - 632510.

• "கண்டக்டர்!.... நான் இறங்குற 
ஸ்டாப்பிங் வந்திடுச்சு!.... விசில் குடுங்க!''
"உன் கிட்டே விசிலைக் குடுத்துட்டு நான் என்ன பண்றது தம்பி?''
வ.அமுதன், 20/1, பயத்தவான்காடு, 
அகஸ்தியன் பள்ளி, 
வேதாரண்யம் - 614810.

• "அக்கா!.... நீ வாயில் 
புடவை கட்டுவியா?''
"சேச்சே! 
இடுப்புலேதான் கட்டுவேன்!''
எஸ்.சடையப்பன், திண்டுக்கல் - 624004.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com