பொன்மொழிகள்

வெகுகாலம் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை துணிந்து சந்திப்பதே மேல்!
பொன்மொழிகள்

 வெகுகாலம் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை துணிந்து சந்திப்பதே மேல்!
 - டெஸ்கார்ட்ஸ்

 வெற்றியின் முதல் படி ஆர்வம்தான்! 
- வில்லியம் ஆஸ்ஸர்

 எந்த நேரமும் சுறுசுறுப்புடனுடனும், ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம்.  
- எமர்சன்

 எண்ணம் ஒரு மலர்!.... மொழி அதன் மொட்டு!.... செயல் அதன் கனி!.  
- பீச்சர்

 எதற்கும் தயாராக இருப்பவனைத்தான் வாய்ப்புகள் தேடி வரும்.  
-  போவீ

 நண்பர்கள் இதமாக உன் குறைகளை எடுத்துச் சொல்லுவார்கள். எதிரிகளோ கசப்பாக உன் குறைகளை எடுத்துச் சொல்வார்கள். எப்படியோ உன் குறைகளை உணர்வதற்கு இருவருமே காரணம். 
- போவீ

 உற்சாகம் உள்ளவனை எதிர்ப்புகள் தடை செய்து விட முடியாது.  
-  சில்லா

 இன்பத்தை இரட்டிப்பாக்கி துன்பத்தைப் பாதியாகக் குறைப்பதுதான் நட்பு! 
- பேக்கன்

 அனுபவம் இல்லாமல் யாரும் அறிவாளியாவது இல்லை.  
- மவுரியர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com