பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: தூய்மைப் பணி! 

""அக்கா, அம்மா தினமும் வீட்டை சுத்தம் பண்ணுறாங்க. நமக்கு சமைச்சு போடுறாங்க. நமக்கு ஸ்கூல் லீவு விட்ட மாதிரி அம்மாவுக்கு எப்போ தான் லீவு விடுவாங்க'' தம்பி ஆகாஷ் கேட்டான்.
பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: தூய்மைப் பணி! 

""அக்கா, அம்மா தினமும் வீட்டை சுத்தம் பண்ணுறாங்க. நமக்கு சமைச்சு போடுறாங்க. நமக்கு ஸ்கூல் லீவு விட்ட மாதிரி அம்மாவுக்கு எப்போ தான் லீவு விடுவாங்க'' தம்பி ஆகாஷ் கேட்டான்.
""டேய் அம்மாவுக்கு லீவு எல்லாம் கிடையாது. அப்பா ஹெல்ப் பண்ணினாதான் அம்மாவுக்கு ரெஸ்ட்! என்றாள் அக்கா ஷோபி.
""சரி வா, நாம அப்பா கிட்ட போய் கேட்போம்...'' என செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த அப்பாவுக்கு இருவரும் சிறுசிறு உதவி செய்தார்கள்.
அப்பா செடிகளுக்கு தண்ணீர் விட்டு முடித்ததும் டி.வி பார்க்க அழைத்து வந்தார்கள்.
""ஏம்ப்பா, அம்மாவுக்கு எப்போ தான் லீவு. கரோனா வந்த பிறகு உங்களுக்கு ஆபீஸ் எல்லாம் மூடிட்டாங்கதானே.''
""ஆமாடா கண்ணுங்களா. நாம் எல்லோரும் சேர்ந்து நாளைக்கு எல்லா வேலையும் செய்வோம். அம்மாவுக்கு லீவு கொடுத்துடலாம்'' என அப்பா சொல்ல இரு குட்டீஸ்களுக்கும் ஜாலி ஜாலி என துள்ளி குதித்தார்கள்.
மறுநாள் காலை அப்பாவுடன் எழுந்து கொண்டார்கள் ஆகாஷ், ஷோபி இருவரும்.
வீட்டில் இருந்த குப்பைகளை எடுத்து தொட்டியில் போடச் சொன்னார் அப்பா.
ஆகாஷ் ஒரு குப்பை தொட்டியை எடுத்துக் கொண்டு முந்தின நாள் விளையாடி கிழித்த பேப்பர் குப்பைகள், அம்மா பயன்படுத்திய முகக்கவசத்தை எடுத்து குப்பை தொட்டியில் போட்டான்.
ஷோபிக்கு உதவியாக பக்கத்து விட்டு சதிஷ் வந்தான்.
""அக்கா நாம் பயன்படுத்திய முகக்கவசங்களை குப்பையில் போடலாமா? டி.வியில் நாம் பார்க்கும் போது முகக்கவசங்களை கண்ட இடத்தில் போடாதீர்கள். அதனால் கரோனா பரவும் என்று சொன்னார்களே நீ பார்த்தியா'' என்று கேட்டான்.
அதற்கு ஷோபி, ""நாம் வீட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் போடலாம்'' என்றாள்.
மீண்டும் அப்பாவிடம் சென்ற ஆகாஷ், ""முகக்கவசத்தை குப்பை தொட்டியில் போட்டால் அதனை எடுத்துச் செல்பவர்களுக்கு நோய் வராதா அப்பா'' என கேட்டான்.
அதற்கு அப்பா சொன்னார், ""நாம் குப்பைத் தொட்டியில் போடும் கழிவுகளை பத்திரமாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தகுந்த பாதுகாப்போடு நாம் போடும் முகக்கவசங்களை பத்திரமாக அகற்றி குப்பை கிடங்கில் சேர்த்துவிடுவார்கள்'' என்றார்.
""அவர்கள் பாவம்தானே அப்பா. நாம அவுங்களுக்கு ஏதாவது கிப்ட் கொடுக்கணும்பா'' என்றான் ஆகாஷ்.
""சரி, அப்பா உன்னை கடைக்கு அழைச்சிட்டு போறேன். நம்ம தெருவை சுத்தம் பண்ற அங்கிள், ஆன்ட்டிக்கு என்ன வாங்கி தர போறே?'' கேட்டார்.
""அப்பா நீங்கள் வெளியே போயிட்டு வந்தா ஹேண்ட்வாஷ் போட்டு தான் கை கழுவிட்டு வீட்டுக்குள்ள வர்றீங்க...., அது மாதிரி அவுங்களுக்கும் ஹேண்ட் வாஷ் வாங்கி கொடுக்க போறேன். அப்ப தான் அவுங்க வீட்டுல இருக்கிறவுங்களும் பாதுகாப்பா இருப்பாங்க இல்லையா?'' சொன்னான் ஆகாஷ்.
ஆகாஷை ஆச்சரியமாக பார்த்தார் அப்பா.

மூ.ஹாசினி,
 7-ஆம் வகுப்பு, திருத்துறைப்பூண்டி - 614713.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com