அங்கிள் ஆன்டெனா

ஒவ்வொரு புயல் வரும்போதும் அதற்குப் பெயரும் வருகிறதே. இது எப்படி? யார் பெயர் சூட்டுகிறார்கள். எதை வைத்துப் பெயர் சூட்டுகிறார்கள்?
அங்கிள் ஆன்டெனா


கேள்வி: ஒவ்வொரு புயல் வரும்போதும் அதற்குப் பெயரும் வருகிறதே. இது எப்படி? யார் பெயர் சூட்டுகிறார்கள். எதை வைத்துப் பெயர் சூட்டுகிறார்கள்?

பதில்: 2000-ஆம் ஆண்டு சில முக்கிய நாடுகள் ஒன்று கூடி (இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சில) இனி வரும் காலங்களில் புயல்களுக்குப் பெயர் சூட்டுவது என்று முடிவெடுத்தார்கள்.  இதன்படி இந்த நாடுகள் அனைத்தும் தங்களுக்கு விருப்பமான பெயர்களைத் தேர்வு செய்தனர்.

இந்தப் பெயர்கள் எட்டு எழுத்துக்களுக்குள் இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. மேலும் எந்த வகையிலும்  மத ரீதியாகவோ இன ரீதியாகவே மக்களின்   மனதைப் புண்படுத்தாத வகையில் இப் பெயர்கள் இருக்க வேண்டும் என்றும் எளிதில் எல்லோரும் உச்சரிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று சில பல நிபந்தனைகள் உள்ளன. 

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மட்டும் இதற்கு 169 பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் வந்த அம்பான் புயலின் பெயர்கூட இந்தியா பரிந்துரை செய்ததுதான். இந்தப் பெயர் புயலுக்குச் சூட்டப்படுவதற்கு முன் குழு நாடுகளின் அனுமதி பெற வேண்டும். 

அதெல்லாம் சரி, இந்தப் பெயர்களை யார் சூட்டுகிறார்கள் என்கிறீர்களா? இதுவரை பரிந்துரை செய்யப்பட்ட, தேர்வு செய்து சூட்டப்பட்ட பெயர்களில் பல பெயர்கள் பொது மக்களாகச் சூட்டியதுதான். நீங்கள்கூட உங்களுக்குப் பிடித்த பெயரை வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தால் தேர்வு செய்வதில் ஒரு பிரச்னையும் இல்லை.

அடடா, இது தெரியாமல் போயிற்றே, நல்ல பெயர்கள் நான் வைத்திருக்கிறேன் என்று நினைப்பவர்கள் உடனே தாளை எடுங்கள், பெயரை எழுதுங்கள், அனுப்பி வையுங்கள். அடுத்த புயலுக்கு நீங்கள் அனுப்பிய பெயர் சூட்டப்பட வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com