Enable Javscript for better performance
குறள் நெறிக் கதைகள்!: எண்ணித்துணிக.- Dinamani

சுடச்சுட

  

  குறள் நெறிக் கதைகள்!: எண்ணித்துணிக. 

  By என். லக்ஷ்மி பாலசுப்ரமணியன்  |   Published on : 14th March 2020 10:44 PM  |   அ+அ அ-   |    |  

  sm15


  ""வாங்க அண்ணா!'' என்று அழைத்தார் கதிரவனின் அம்மா. அவனது மாமா புது டெல்லியில் இருந்து வந்திருந்தார். அவர் இந்திய தகவல்தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். 

  நலம் விசாரிப்புகளுக்கு பிறகு மாமா கதிரவனிடம் பேசத்தொடங்கினார். 

  ""என்ன கதிரவா? உன் படிப்பு எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?'' 
  கதிரவன் பட்டய கணக்காளர் ளஇஅன படிப்பை படித்துக்கொண்டிருந்தான். 

  ""ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா. இந்தப் படிப்பை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்!'' என்றான் கதிரவன் வருத்தத்துடன். 

  ""இதுவரைக்கும் எத்தனை தடவை பரீட்சை எழுதி இருக்கிறாய்?'' என்று கேட்டார் மாமா. 

  ""மூன்று முறை எழுதி விட்டேன் மாமா. ஆனால் என்னால் பாஸ் செய்ய முடியவில்லை!'' என்றான். 

  ""சரி உனக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன் கேள்! நான் இந்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறையில் பணிபுரிந்தேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா? எங்கள் துறையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை உனக்கு கூறுகிறேன்!......1980களின் தொடக்கத்தில் இருந்தே இந்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறையின் வளர்ச்சி ஆரம்பமானது. எங்கள் துறைக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தேவைப்பட்டது'' 

  ""சூப்பர் கம்ப்யூட்டர் என்றால் என்ன மாமா?'' 

  ""அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை கண்டறியவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் அதிவிரைவு கணினிகள் "சூப்பர் கம்ப்யூட்டர்கள்' என்று அழைக்கப்படுகின்றன!"' 

  ""இந்த மாதிரி சூப்பர் கம்ப்யூட்டர்கள் எந்தெந்த நாடுகளில் இருந்தன மாமா?'' 
  ""இத்தகைய அதிவிரைவு கணினியை வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே! அதன் பெயர் "கிரே சூப்பர் கம்ப்யூட்டர்' ஆகும். எனவே இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை அமெரிக்காவை அணுகியது. சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை வழங்குமாறு கேட்டது'' 

  ""அமெரிக்கா உடனே உதவி செய்ததா மாமா?'' 

  ""இல்லை! இல்லவே இல்லை!'' 

  ""ஏன்? என்ன காரணம் மாமா?'' 

  ""பாகிஸ்தானுடன் நட்புறவு பாராட்டிய அமெரிக்கா இந்தியாவிற்கு சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை வழங்க மறுத்துவிட்டது! உலகின் பிற நாடுகள் இதை கண்டித்தன!'' 

  "" இந்திய விஞ்ஞானிகள் எப்படி உணர்ந்தார்கள் இந்த சம்பவத்தை?'' 

  ""இந்திய விஞ்ஞானிகளுக்கு கோபமும் அவமானமும் ஒரு சேர ஏற்பட்டன. எனவே ரஷ்ய அறிவியல் வல்லுநர்களின் துணையோடு இந்தியாவிலேயே அதிவிரைவு கணினியை தயாரிக்க இந்திய அரசு முடிவு செய்தது!'' 

  ""அதற்காக அவர்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டார்கள் மாமா?'' 
  ""இத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தன்னிறைவு பெறவும் C-DAC [ CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING] எனப்படும் அதிவிரைவு கணினி வளர்ச்சி மையம் 1988 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது'' 

  "" முதல் முயற்சியிலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா மாமா?'' 

  "" அந்தக் குழுவில் நானும் ஒருவனாக பங்கு பெற்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். நாங்கள் கடுமையாக போராடினோம். வெற்றியின் விளிம்பு வரை பலமுறை சென்று தோல்வியை சந்தித்தோம். இப்படி ஒருமுறை இரண்டு முறை அல்ல பல முறை நாங்கள் தோல்வி பெற்றோம்! பிற துறையில் இருந்த வல்லுனர்கள் எங்களது மனச்சோர்வை கண்டு இம்முயற்சியை கைவிடுமாறு அறிவுறுத்தினர்!'' 

  ""அப்புறம் என்ன ஆச்சு மாமா?''

  ""ஆனாலும் எங்களிடம் இருந்த நம்பிக்கை குறையவில்லை! தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தோம். அதன் பயனாக 1990ஆம் ஆண்டு அதிவிரைவு கணினியின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டது! இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி!...அதை செயல்படுத்தி பார்த்தோம். அதன் முடிவுகள் மிகவும் திருப்திகரமாக இருந்தன. எனவே சூரிச்சில் ZURICH நடைபெற்ற, "CONPAR 1990' எனப்படும் அதிவிரைவு கணினி கண்காட்சியில் பார்வைக்கு வைத்தோம். அதன் செயல்பாட்டை பல்வேறு நாடுகளின் அறிஞர்கள் சோதித்துப் பார்த்தனர். இந்திய கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவும் முன்னேறிய கருவிகளை பயன்படுத்தி அதிவிரைவு கணினியை உருவாக்கியிருந்தனர்.  ஆனால் இந்தியர்கள் ஆகிய நாங்கள் மிகவும் குறைந்த தொழில்நுட்ப வசதியில் மிகச்சிறந்த அதிவிரைவு கணினியை உருவாக்கி இருந்தோம். தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஜப்பான் போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி போட்டியில் இந்தியாவின் அதிவிரைவு கணினி இரண்டாம் இடம் பெற்றது. 

  ""சூப்பர் மாமா!....''

  ""இந்நிகழ்வானது இந்திய விஞ்ஞானிகளுக்கு ஒரு மாபெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. ஜெர்மனி, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்துடன் உற்று நோக்கின. ஏன்? அமெரிக்கா கூடத்தான்! ஆரம்பத்தில் கணினியில் மிகச் சிறிய குறைபாடுகள் இருந்தன. எங்கள் வல்லுனர்கள் குழு அதில் இருந்த குறைபாடுகளை விடாமுயற்சியுடன் போராடி நீக்கியது. இதன் காரணமாக 1991 ஆம் ஆண்டு "TWm 8000"[PARAM 8000] என்னும் இந்தியாவின் முதல் அதிவிரைவு கணினியை எங்கள் குழு நாட்டுக்கு அர்ப்பணித்தது!''

  ""இந்த நிகழ்ச்சியை அமெரிக்கா எப்படி பார்த்தது மாமா?'' 

  ""அமெரிக்கர்களால் இந்தியாவின் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. காரணம் மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்தியர்கள் இத்தகைய கம்ப்யூட்டர்களை உருவாக்குவார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. உலக நாடுகள் ஆச்சரியத்தால் வாயடைத்துப் போயின. அமெரிக்காவின் நாளிதழான "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ், இந்தியா கோபப்பட்டு சாதித்தது!'' என்று இந்தியாவின் பெருமையை எழுதியது'.

  ""சரி இந்தத் துறையில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டனவா மாமா?'' 

  "" நிச்சயமாக ஏற்பட்டது. TWm 8000 அதிவிரைவு கணினியை தொடர்ந்து TWm8600, TWm9900ss Utßm TWm10000,PARAM PADMA, PARAM YUVA,PARAM ISHAN,PARAM BRAHMA போன்ற அதிவிரைவு கணினிகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன. தோல்வியை கண்டு துவண்டு இருந்தால் நாங்கள் இத்தனை சாதித்து இருக்க முடியுமா? நீயே சொல் கதிரவா?'' என்றார் மாமா. 

  ""ஆமாம் மாமா! நீங்கள் சொல்வது சரிதான்!'' 

  ""தேர்வு என்பதும் இதைப் போலத்தான்! முதல் முயற்சியிலேயே பட்டய கணக்காளர் charted accountant போன்ற படிப்புகளுக்கு வெற்றி கிட்டாது.  பல முறை முயற்சி செய்ய வேண்டி இருக்கும். மேலும் நமது தேர்வை சரியான முறையில் எழுதுகின்றோமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்! பலமுறை யோசித்து தெரிந்து செயல்பட வேண்டும் அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்! ஆகவே உனது முயற்சியை கைவிடாதே! உனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்!'' என்றார் மாமா. 

  ""சரி மாமா நிச்சயம் விடாமுயற்சி செய்து பார்க்கிறேன்! நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவேன்!'' என்றான் கதிரவன். 

  இதே கருத்தையே வள்ளுவரும் "தெரிந்து செயல்வகை'  அதிகாரத்தில், தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு  அரும்பொருள் யாதொன்றும் இல் என்று கூறுகிறார். 

  இதன் பொருள் "ஆராய்ந்து விடாமல் முயற்சி செய்து சான்றோர்கள் உடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய செயலை நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை!' என்பதாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai