Enable Javscript for better performance
குழந்தைப் பாடல்!: எங்கள் வீட்டுத் தோட்டம்!- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைப் பாடல்!: எங்கள் வீட்டுத் தோட்டம்!

    By பொன் கண்ணகி  |   Published on : 14th March 2020 10:30 PM  |   அ+அ அ-   |    |  

    sm12


    எங்கள் வீட்டுத் தோட்டத்தினை 
    வந்து பாருங்க!
    என்ன, என்ன காய்கள் வேண்டும் 
    பறித்துச் செல்லுங்க!

    பந்தலிலே பாகற்காய் 
    தொங்குது பாரு!
    பானை போல பரங்கிக்காய் 
    படுத்துக் கிடக்குது!

    புடலங்காய் பாம்பு போல 
    தொங்குது பாரு!
    புளிச்சக்கீரை தலை நிமிர்ந்து  
    நிற்பதைப் பாரு!

    அழகான அவரைக்காய்ப் 
    பந்தலைப் பாரு!
    அதனருகே அரைக்கீரை 
    செழுமையைப் பாரு!

    கண்சிமிட்டிக் கத்தரிக்காய் 
    அழைக்குது பாரு!
    கறிவேப்பிலை வளர்ந்திருக்கும் 
    நேர்த்தியைப் பாரு!

    வெண்டைக்காய் விரல் போல 
    நீண்டிருக்கு பார்!
    பறித்து எடுத்துக் கொண்டுபோய்ச்  
    சமைத்துச் சாப்பிடு!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai