ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்!

ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உயிரன அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று கருதப்படுகிறது. 
ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்!

ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உயிரன அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து உயிரனங்களும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. சுவாசம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியச் செயலாகும். 

ஆனால் ஜெல்லி மீன், பவளப்பாறைகளுடன் ஒன்றி வாழும் "ஹென்னகுயா சால்மினிகோலா' என்னும் ஒரு சிறிய ஒட்டுண்ணி ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருவதை இஸ்ரேலில் உள்ள "டெல் அவிவ்' பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

ஜெல்லி மீன், பவளப் பாறைகளுடன் ஒன்றி வாழும் இந்த வகை சிறிய ஒட்டுண்ணிகள் இந்தியாவில், காலா, கிழங்கான் என்ற பெயரில் அறியப்படும் சால்மன் மீன்களுக்குள் காணப்படுகிறது. இந்த ஒட்டுண்ணியிடம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய எந்தத் திறனும் இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

இது குறித்து, "டோரதி ஹுசான்' என்னும் பேராசிரியர், ""பெரும்பாலான உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஓர் உறுப்பு, "மைட்டோகான்ட்ரியா' எனப்படுவதாகும். இதன் உதவியுடன்தான் உயிரினங்களில், சுவாசம், ஆற்றல், இனப்பெருக்க வேதியியல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. 

ஆனால் இந்த ஒட்டுண்ணி "ஹென்னகுயா சால்மினிகோலா' வில் "மைட்டோ கான்ட்ரியா' வே இல்லை! 

இந்த ஒட்டுண்ணி எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், இது ஆக்ஸிஜன் இல்லாமல் வேறுபட்ட சுவாசப் பழக்கத்தைக் கொண்டுள்ளதா என்பதும் இன்னும் தெரியவில்லை! 

இந்த ஒட்டுண்ணி, காற்று இல்லாத சூழலில் வாழக்கூடிய உயிரினமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. 

இதனால் அறிவியலில், புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம்!..... ஆக்ஸிஜன் இல்லமல் சில உயிரினங்கள் வாழ முடியும் என்பது தற்போது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com