தண்ணீரும், மின்சாரமும்!

மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீரின் தேவை மிக முக்கியம் அல்லவா? உலகு எங்கிலும், சுமார் 780 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீரும், மின்சார வசதியும் இன்னும் கிடைக்கவில்லையாம்! 
தண்ணீரும், மின்சாரமும்!


மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீரின் தேவை மிக முக்கியம் அல்லவா? உலகு எங்கிலும், சுமார் 780 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீரும், மின்சார வசதியும் இன்னும் கிடைக்கவில்லையாம்! 

இந்த இரண்டு தேவைகளையும் ஒரே சாதனம் மூலம் பெறும் முயற்சியில் முதல் கட்டமாக ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்களாம்! 

சவூதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின் புதிய கண்டிபிடிப்பு மக்களின் நீர் மற்றும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவக்கூடும்! 

வழக்கமான தொழில்நுட்பத்தில், சூரிய ஒளி மின்கலத்தால் சேகரிக்கப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளில் உள்ள நல்ல சூரிய ஒளியில் பத்து சதவீதமே போதுமானது. மீதமுள்ள சூரியக் கதிர் வீச்சின் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக மாறும். இது வழக்கமாக வீணாகிவிடும். அந்த வெப்பத்தைக் கடல் நீரை ஆவியாக்கி, வடிகட்டப் பயன்படுத்தும் வகையில் ஒரு கட்டணமைப்பை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மின்கலத்தின் ஆற்றல் சேகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் மிகவும் தரமான சிலிக்கான் ஒளிமின்அழுத்த கலத்தின் கீழ்ப்பகுதியில் நீரை வடிகட்டுவதற்கான வசதிகளை இணைத்துள்ளனர். இந்த சாதனத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சூரிய ஒளியின் மூலம் நீரை வடிகட்டலாம் என்று கண்டறிந்துள்ளனர். 

இந்த சாதனத்தின் ஒரு சதுர மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 1.6 லிட்டர் கடல் நீரை வடிகட்டுவதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் மின்சார உற்பத்திக்கு இடையூறு இல்லாமல் செய்யப்படுகிறது. இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக உள்ளது. 

எனினும் இப்போது சற்று அதிகமாகப் பொருட் செலவு ஆகிறதாம்.அதைக் குறைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com