படகோட்டியின் போதனை!

ஓர் ஆற்றங்கரையில்,  படகோட்டியுடன் ஒரு படகு இருந்தது. அவ்வழியே ஒரு பண்டிதர் வந்தார். அவர் அக்கரைக்குச் செல்லவேண்டியிருந்தது. படகில் ஏறினார். பண்டிதர் சற்று கர்வம் மிகுந்தவர். அந்த ஆறு அகலமானது. படகோட்டி
படகோட்டியின் போதனை!

ஓர் ஆற்றங்கரையில், படகோட்டியுடன் ஒரு படகு இருந்தது. அவ்வழியே ஒரு பண்டிதர் வந்தார். அவர் அக்கரைக்குச் செல்லவேண்டியிருந்தது. படகில் ஏறினார். பண்டிதர் சற்று கர்வம் மிகுந்தவர். அந்த ஆறு அகலமானது. படகோட்டி படகை அக்கரைக்குச் செலுத்த ஆரம்பித்தான்.

பண்டிதர் படகோட்டியைப் பார்த்து, ""உனக்கு நீதி சாஸ்திரம் பற்றி ஏதேனும் தெரியுமா??'' என்று கேட்டார்.

படகோட்டி, ""எனக்குத் தெரியாதுங்களே!'' என்றான்.

""இப்படி வாழ்க்கையின் பாதியை வீண் செய்து விட்டாயே,.... போகட்டும்!... புராணங்கள்?.....இதிகாசங்கள்?.... எதாவது படித்திருக்கிறாயா?''

""அதுக்கெல்லாம் எனக்கு ஏதுங்க நேரம்?...''

""வாழ்க்கையில் முக்கால் பகுதியை வீணாக்கி விட்டாயே.....வேதாந்தத் தத்துவங்கள் பற்றி ஏதாவது அறிந்திருக்கிறாயா?''

""எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த ஆறு!.... என்னோட இந்த வேலை!.... அவ்வளவுதானுங்க....'' என்று பதில் சொன்னான் படகோட்டி.

பண்டிதர் அந்தப் படகோட்டியை ஒரு மூடன் என்று முடிவுக்கு வந்தார். படகு சென்றுகொண்டிருந்தது.

வெகுதூரத்தில் பெய்த பலத்த மழையால் ஆற்றில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே நீர்ச் சுழல்கள்!.... படகு நிலை தடுமாறிச் சுழல ஆரம்பித்தது! பண்டிதருக்கு பயம் ஏற்பட்டது.

படகோட்டி பண்டிதரிடம், ""ஐயா உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'' என்று கேட்டான்.

பண்டிதரோ, ""தெரியாதே!.... ‘' என்றார்.

""ஐயா, நீங்க உங்க வாழ்நாளின் முழுப் பகுதியையும் வீணாக்கிட்டீங்க!.... நல்லகாலம்! என்னாலே உங்களைக் காப்பாத்த முடியும்!.... இந்தத் துண்டைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்க''.... என்று ஒரு துண்டை அவரிடம் தந்தான். அவரை இழுத்துத் தண்ணீரில் தள்ளினான். அவனிடம் இருந்த பெரிய துடுப்பைப் பிடித்துக் கொள்ளச் செய்தான். பிறகு நீந்திக்கொண்டே அவரையும் ஒருவழியாகக் காப்பாற்றினான். பண்டிதர் படகோட்டியைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

""என்னுடைய கல்வி என் உயிரை இப்போது காப்பாற்றவில்லை. ஆனால் நீ கற்றுக் கொண்ட நீச்சல் என்னைக் காப்பாற்றியது!.... என்னை மன்னிச்சுக்கோப்பா!'' என்றார் பண்டிதர்.

""அப்படியெல்லாம் சொல்லாதீங்க!..... நீங்க படிச்சவரு!''

""இல்லையப்பா!.... நீ கடவுள் மாதிரி என்னைக் காப்பாற்றினாய்!.... என் கர்வத்தையும் அடக்கினாய்!.... நீதான் எனக்கு குரு!''

என்று கூறினார் பண்டிதர். அவரது கர்வம் தண்ணீரில் கரைந்துவிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com