Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டெனா- Dinamani

சுடச்சுட

    

    அங்கிள் ஆன்டெனா

    By DIN  |   Published on : 21st March 2020 03:31 PM  |   அ+அ அ-   |  

    sm13

    கேள்வி:
    தொலைபேசியை எடுத்தவுடன் "ஹல்லோ' என்கிறோமே, இது எப்படிப் புழக்கத்தில் வந்தது?
    பதில்: தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், முதன் முதலில் பேசிய சொல் இது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. அதாவது அவரது உதவியாளரின் பெயர் "ஹல்லோ' என்பதாகவும், அவரை மற்றொரு அறையில் இருக்க வைத்து, தனது தொலைபேசியை இயக்கியவுடன் அவரிடம் தனது குரல் கேட்கிறதா என்பதற்காக "ஹல்லோ, நான் பேசுவது கேட்கிறதா' என்று கேட்டதாகவும் கூறுவார்கள்.
    ஆனால், இதில் சற்றும் உண்மையில்லை. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் "அஹோய்" (AHOI) என்றுதான் தொலைபேசியை எடுத்தவுடன் வாழ்த்தாகச் சொல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டார். "அஹோய்" என்பது அக்காலத்தில் வாழ்த்துச் சொல்லாக இருந்தது.
    ஆனால், தொலைபேசியை மேலும் மேம்படுத்திய தாமஸ் ஆல்வா எடிசன், தொலைபேசியை எடுத்தவுடன் "ஹல்லோ' என்று சொல்வதை வழக்கமாக்கினார். இந்த ஹல்லோவிற்கு அர்த்தம், வெறுமனே ஆச்சர்ய உணர்வுதான். அதாவது எதிர்பாராமல் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்தவுடன், ஆச்சரியத்துடன் ஹாய், ஹேய் என்றெல்லாம் நமது உதட்டில் வருமே அது போன்ற ஒரு சொல்தான் இந்த ஹல்லோ. 
    -ரொசிட்டா
    அடுத்த வாரக் கேள்வி
    கால எந்திரம் என்பது உண்மையா? 
    அதில் பயணித்து கடந்த காலத்துக்கும் 
    எதிர்காலத்துக்கும் செல்வது போல
    திரைப்படங்களிலும் கதைகளிலும் 
    படிக்கிறோமே? இது உண்மையில் சாத்தியமா?
    பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
    நல்ல பதில் கிடைக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai