Enable Javscript for better performance
கலங்கரை விளக்கம்!- Dinamani

சுடச்சுட

    

     கலங்கரை விளக்கம்!

    By DIN  |   Published on : 21st March 2020 03:20 PM  |   அ+அ அ-   |    |  

    sm7

     வருகின்ற கப்பல் களுக்கு
     வழிகாட்டிக் கரையில் சேர்க்கும்
     இரவினில் வழியைக் காட்ட
     எப்போதும் ஒளியை வீசும்!
     
     கோபுரம் போலே மாடக்
     கூண்டுக்குள் ஒளி விளக்கு
     நாற்புறம் ஒளியை வீசும்
     நாவாய்கள் கரையை அறியும்!
     
     படிகளும் உண்டு;நாமும்
     பார்க்கலாம் மேலே ஏறி!
     நெடுங்கடல் நீலப் பரப்பின்
     நேர்த்தியும் காண லாமே!
     
     எல்லோர்க்கும் வழியைக் காட்டும்
     இனியதாம் கலங்கரை விளக்கம்
     நல்லோர்கள் நல்வழி போலாம்
     நாமந்த வழியில் நடப்போம்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai