Enable Javscript for better performance
முறுக்கு!- Dinamani

சுடச்சுட

    

     முறுக்கு!

    By DIN  |   Published on : 21st March 2020 03:19 PM  |   அ+அ அ-   |    |  

    sm6

    முறுக்கு இன்னா முறுக்குதான்!
     அம்மா சுட்ட முறுக்குதான்!
     மூன்று பிரி வளையத்திலே
     மூக்கு துளைக்கும் முறுக்குதான்!
     
     நான்கு பிரி முறுக்கு இங்கே
     நல்லான் கடையில் விற்குது!
     நாக்கில் சுவை மொய்த்தவுடன்
     நாலு வாங்கச் சொல்லுது
     
     எங்கள் பள்ளி ஓரத்திலே
     எசக்கி பாட்டி விற்கிறாள்!
     இரட்டைப் பிரி முறுக்கினாலே
     எங்களையெல்லாம் இழுக்கிறாள்!
     
     நெய் முறுக்கு, கை முறுக்கு
     நித்தம் நித்தம் தின்னலாம்!
     சிறிது காலம் இருப்பு வைத்து
     நினைத்தபோது உண்ணலாம்!
     
     தஞ்சை மாரியம்மன் கோயில்
     ஒற்றைப் பிரி முறுக்குதான்!
     மணப்பாறை முறுக்கினுக்கு
     மாநிலத்தில் பெருமைதான்!
     
     முறுக்கை விரலில் கோர்த்தவாறு
     முத்தழகி சிரிக்கிறாள்!
     வாயில் போட்ட முறுக்கை நன்றாய்க்
     கடித்துச் சுவைத்து உண்கிறாள்!
     
     போட்டி போட்டு நொறுக்கித் தின்னும்
     முறுக்கு போல ஆகுமா?
     முறுக்குதானே பலகாரத்தில்
     முந்தி நிற்கும் தெரியுமா
     சு.பொன்னியின் செல்வன்
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai