காக்கையின் கருணை!

 அதுவொரு அழகிய ஆலமரம் அதிலே வாழ்ந்தது ஒரு காகம்! - அங்கு
காக்கையின் கருணை!

கதை பாடல்
 அதுவொரு அழகிய ஆலமரம்
 அதிலே வாழ்ந்தது ஒரு காகம்! - அங்கு
 புதிதாய் வந்த ஆந்தைக்கோ
 பகலில் பார்வை தெரியாது!
 
 ஒரு நாள் இரண்டும் அருகருகே
 உட்கார்ந்து பேசும் வேளையிலே - தம்
 திருவாய் மலர்ந்து இனிதாக
 தீர் மானமொன்றைப் போட்டனவே!
 தலைமுறை, தலைமுறை, தலைமுறையாய்
 இருவரும் இருந்தோம் தனித்தனியாய்! - இனி
 பழையன கழிதல் நாம் செய்து
 பகைமை மறப்போம் இதுமுதலாய்!
 
 இரவில் உனக்குக் கண் தெரியும் - இரை நீ
 எடுத்து வா! நம் பசி மறையும்!
 பகலில் பறந்து நான் சென்று
 நமக்கு உணவை நான் கொணர்வேன்!
 
 என்றே முடிவு செய்துவிட்டு
 இணைந்து வாழத் தொடங்கினவாம்!
 இதனைக் கண்ட மரம் கூட - தன்
 கிளைக்கரம் கொண்டு வாழ்த்தியதாம்!
 
 இரண்டும் திரிந்து இரை எடுக்கும்!
 பசி போக்கி, உதவி, மனம் களிக்கும்! - தினம்
 ஒருவர்க்கொருவர் உதவி செய்து
 ஒற்றுமையாய்ச் சேர்ந்து வாழ்ந்தனவே!
 
 வளர்கவி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com