பொன்மொழிகள்!

எளிமையான அமைப்பினைக் கொண்ட உயிரினமான மண்புழு ஆற்றியது போன்றதொரு முக்கியப் பங்கினை உலக வரலாற்றில் பிற உயிரினங்கள் ஆற்றினவா.
பொன்மொழிகள்!

• எளிமையான அமைப்பினைக் கொண்ட உயிரினமான மண்புழு ஆற்றியது போன்றதொரு முக்கியப் பங்கினை உலக வரலாற்றில் பிற உயிரினங்கள் ஆற்றினவா.
- சார்லஸ் டார்வின்
• இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள். பிறகு எல்லாவற்றையுமே நீங்கள் சிறப்பாகப் புரிந்து கொள்வீர்கள். 
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
• காடுகள் நாட்டின் நுரையீரல்கள்! அவை காற்றைத் தூய்மைப் படுத்தி புத்தம் புது வலிமையை மக்களுக்குத் தருகின்றன. 
- பிராங்ளின் ரூஸ்வெல்ட்
• இயற்கையைப் பாதுகாத்துப் பராமரிக்க குழந்தைளாக இருக்கும்போதே கற்றுக்கொடுங்கள்.
- காண்ராட் லாரன்ஸ்
• சிந்திக்காமல் படிப்பது வீண். படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது 
- கன்பூசியஸ்
• இன்பத்தின் ரகசியம் விரும்புவதைச் செய்வதில் அல்ல,.... நீ செய்வதை விரும்புவதுதான்! 
- ஜேம்ஸ் எம்.பெர்ரி
• பெறத்தக்க பேறுகளில் எல்லாம் மேலான பேறு ஒழுக்கத்தைப் பெற்று இருப்பதுதான்! 
- ரூஸோ
• வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியே இருக்க வேண்டும். 
- நேரு
• சுறுசுறுப்பானவனுக்கு எல்லா வேலைகளுமே எளிது. சோம்பேறிக்கு எல்லாமே கடினம். 
- அரோன்புர்
தொகுப்பு : சஜி பிரபு மாறச்சன், 
சரவணந்தேரி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com