மரங்களின் வரங்கள்!

நான் தான் நீரெட்டி முத்து மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஹிட்நோகார்பஸ் பென் டன்ட்ரா என்பதாகும். நான் அகாரியசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மரவட்டை, வட்டை என்ற வேறு
மரங்களின் வரங்கள்!

முத்தான முத்தல்லவோ நீரெட்டி முத்து மரம்!

குழந்தைகளே நலமா....

நான் தான் நீரெட்டி முத்து மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஹிட்நோகார்பஸ் பென் டன்ட்ரா என்பதாகும். நான் அகாரியசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மரவட்டை, வட்டை என்ற வேறு பெயர்களும் உண்டு. மராத்தி மரம் அல்லது சவுல்முரகரா என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். என்னுடைய விதை, வேர், இலை ஆகியவை அதிக மருத்துவ பயன்கள் கொண்டவை. என்னுடைய தாயகம் ஜப்பான் மற்றும் சீனாவாகும். 

நான் நம் நாட்டில் தமிழ்நாடு, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் இன்றும் இருக்கிறேன். என் காய் பிஞ்சாக இருக்கும் போது கருப்பா இருக்கும், பின் முற்றும் போது அரக்குக் கலராக மாறும், அதான் குழந்தைகளே மரக் கலராக மாறும். நான் 30 அடி முதல் 75 அடிகள் வரை வளருவேன். நான் பசுமைக்காடுகளிலும், ஆற்றுப்படுகைகளில் அதிகம் காணப்படுவேன். என் இலைகள் கரும்பச்சை நிறத்தில் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். 

எனக்கும் ஆண் குழந்தைகள் (பூக்கள்), பெண் குழந்தைகள் (பூக்கள்) இருக்காங்க. வெண்மை நிறத்தில் ஆண் பூக்கள் ஒன்று திரண்டும், பெண் பூக்கள் தனித்தும் இருப்பாங்க. என் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கிறாங்க. அந்த எண்ணெய் மஞ்சள் நிறத்திலிருக்கும். இந்த எண்ணெய்யில் "ஷவ்ல்மூக்ரா' என்ற வேதியப் பொருள். இது அதிக மருத்துவ குணம் உடையது. தொழுநோயைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது. தொழு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து என் எண்ணெய்யை மேல் பூச்சாக பூசி வந்தால் அந்த நோய் விரைவில் குணமடையும். 

அது மட்டுமா குழந்தைகளே, இந்த எண்ணெய் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை படைத்ததுன்னு ஆராய்சியாளர்கள் சொல்றாங்க. மேலும், இது "லீகோடர்மா' என்ற நோயையும் குணப்படுத்தும். உடலில் சூடு காரணமாக அவ்வப்போது தோன்றும் புடைத்த கட்டிகள், சொறி, சிரங்கு, ஆறாத புண்களையும் இந்த எண்ணெய் குணப்படுத்தும். என் விதையை அரைத்து நீரில் கலந்து ஊட்டச் சத்து மருந்தாகவும் குடிக்கலாம். இது கழுத்து, நெஞ்சுவலி, கண் நோய் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இதனால், நாள்பட்ட ஆறாத குடல் புண்கள் குணமாவதோடு, வயிற்றுப் புழுக்களையும் வெளியேற்றும். இதைத் தவிர நான் வீடு கட்டவும், கட்டுமானப் பொருட்களாகவும், மரப் பெட்டிகள் செய்யவும், ஏழை, எளிய மக்களுக்கு அடுப்பெரிக்கவும் பெரிதும் பயன்படறேன். என் எண்ணெய்யில் உள்ள பல வகை வேதியல் பொருள்களுடன் மற்ற மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிர்களை சரிவிகிதத்தில் கலந்து தாவரங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தாகவும், ஊட்டச்சத்து மிக்க ஊக்கியாகவும் தயாரிக்கலாம். 

என் மரத்தின் வேர் மற்றும் காய்ந்த இலைகளையும் சேர்த்து, நீரில் நன்றகாக ஊற வைத்து கஷாயமாக்கி குடித்தால் கொசுவினால் உண்டாகும் மலேரியா காய்ச்சல் ஓடிடும். அது மட்டுமா, இதையே நீரில் கொதிக்க வைத்து, அடிச் சாற்றைத் தலையிலிட்டு குளித்து வந்தீர்களேயானால் முடி உதிர்வது சுத்தமாக இருக்காது. என் பூவிலிருந்து நறுமணத்தைப் பிரித்தெடுத்து வாசனை பொருள்களையும் தயாரிக்கிறார்கள். மண்ணுக்கு மரம் பாரமல்ல, மழைக்கு அது ஆதாரம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com