இந்தியாவின் முதல் மின்சாரப் பேருந்து!

இப்போது நம் நாடு எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று சுற்றுச் சூழல் மாசுபடுதலைச் சமாளிப்பதுதான்! சென்னையில் இப்போது மாசுபாடு மிக அதிகமாகிவிட்டது.
இந்தியாவின் முதல் மின்சாரப் பேருந்து!

கருவூலம்
இப்போது நம் நாடு எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று சுற்றுச் சூழல் மாசுபடுதலைச் சமாளிப்பதுதான்! சென்னையில் இப்போது மாசுபாடு மிக அதிகமாகிவிட்டது. (கரோனா இல்லாபோதும் முகத்தைத் துணியால் கட்டிக்கொண்டு பலர் வீதியில் வாகனங்களில் செல்வதைப் பார்த்திருக்கிறோம்) 
இதற்காக தமிழக அரசு மின்சாரப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கும் லண்டனைச் சார்ந்த சி-40 முகமைக்கும் இடையே 2018, மார்ச் 28 - ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 
மத்திய அரசின் ஃபேம் இந்தியா - 2 (FAME INDIA - 2 ) என்ற மின்சார வாகனங்கள் தயாரிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 64 நகரங்களில் 5,595 மின்சாரப் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்க ஒப்புதல் கிடைத்தது. 
முதல் மின்சாரப் பேருந்து !
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக மின்சாரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த முதல் பேருந்து சென்ட்ரல் எம்.ஜி.ஆர். இரயில் நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படுகிறது. இதனை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 
பேருந்தின் சிறப்பு அம்சங்கள்!
பேருந்து முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. வழித்தடங்களளை அறியக்கூடிய ஜி.பி.எஸ். வசதி உள்ளது. பேருந்தின் மின்சார இருப்புநிலை, வெப்பநிலை, ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, மின்கசிவு ஏற்பட்டால் அதைக் கண்டறிந்து தானாக செயல் இழக்க வைத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கண்காணிக்கக்கூடிய நவீன தொழில்நுட்ப அமைப்பு உள்ளது.
சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் பேருந்திலேயே இருக்கும். 40 கி.மீ தூரத்திற்கு ஒருமுறை பேட்டரியை மாற்றம் செய்து அதிகபட்சமாக 200 கி.மீ. வரை இயக்கலாம்! அதற்கு ஏற்ற வகையில் பேருந்தில் பாட்டரிகள் இருப்பு இருக்கும். தற்போது குறைந்த பட்ச கட்டணம் 11 ரூபாயாக உள்ளது. எதிர்காலத்தில் இவ்வகைப் பேருந்துகள் இந்தியச் சாலைகளில் பயன்பாட்டில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com