அங்கிள் ஆன்டெனா

மின்னல் மின்னும்போது அது நேர்கோட்டில் இல்லாமல் கன்னாபின்னாவென்று வளைந்தும் நெளிந்தும் ஒரு ஒழுங்கில்லாமல் தெரிவது ஏன்?
  அங்கிள் ஆன்டெனா

கேள்வி: மின்னல் மின்னும்போது அது நேர்கோட்டில் இல்லாமல் கன்னாபின்னாவென்று வளைந்தும் நெளிந்தும் ஒரு ஒழுங்கில்லாமல் தெரிவது ஏன்?

பதில்: முதலில் மின்னல் எப்படி வருகிறது என்று பார்ப்போம். வானில் உள்ள மேகங்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்வதால் மின்னல் 
உண்டாகிறது.

வானில் உயரத்தில் உள்ள மேகங்கள் (அதாவது மேல் பகுதியில் உள்ளவை)  பாஸிட்டிவ் சார்ஜை கொண்டிருக்கின்றன. கீழே உள்ள மேகங்கள் நெகட்டிவு சார்ஜை கொண்டவை.  சாதாரணமாக  வீட்டு உபயோக வயர்கள் இரண்டு வயர்களையும் சில மூன்று வயர்களையும் கொண்டிருக்கும். ஒன்று நெகட்டிவ் சார்ஜ், மற்றொன்று பாசிட்டிவ் சார்ஜ். மூன்றாவது எர்த் ஆகப் பயன்படுகிறது.

வான் மேகங்களிடையே இருக்கும் இந்த நெகட்டிவு சார்ஜும் பாசிட்டிவ் சார்ஜும் இணையும் போது மின்சாரம் உண்டாகிறது. அதனால்தான் பளீரென்ற வெளிச்சம் உண்டாகிறது.

இந்த மின்சாரத்தைக் கடத்துவதற்குக் காற்று தேவையல்லவா. இந்த காற்று ஒரே சீராக இருந்தால் மின்னலும் நேர்கோட்டில் பாயும். ஆனால் எப்போதும் காற்று சீராக இருப்பதில்லை. காற்று கன்னாபின்னாவென்று வீசுவதால் மேலிருந்து வரும் மின்சாரக் கதிர்களும் கன்னா பின்னாவென்று பாய்வதால்தான் இந்த நிலை.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com