பொன்மொழிகள்

ஒழுக்க நெறிகளுடன் வாழ்வதே பெருமை!.... பல ஆண்டுகள் வாழ்வதில் பெரிய பெருமை ஒன்றுமில்லை!  
பொன்மொழிகள்


ஒழுக்க நெறிகளுடன் வாழ்வதே பெருமை!.... பல ஆண்டுகள் வாழ்வதில் பெரிய பெருமை ஒன்றுமில்லை!  

- மாந்தேன்

தனக்காக உழைப்பது பொருளைச் சேர்க்கும். பிறருக்காக  உழைப்பது புகழைச் சேர்க்கும்!

 - பில்டிஸ்

செலவுகளைக் குறைப்பதுகூட  பணம் சேர்ப்பதற்கான ஒரு வழிமுறைதான்! 

- வால்ட் விட்மேன்

பிறருடைய குற்றங்களைக் காண்பவன் அரை மனிதன். அவற்றை மன்னிப்பவனோ முழு மனிதனாகிறான். 

- வேட்லி

கோபம் சட்டென்று வாயைத் திறக்கும்! ஆனால் கண்களை மூடிவிடும்! 

- கியாதே

முகமலர்ச்சியை ஈடு செய்யும் அலங்காரங்களே கிடையாது! 

- பியாட்டி

பொறுமையில்லாத, அவசரத்தனம் இதயத்தை மழுங்க அடிக்கும்! 

- லாட்ஷே

முடிவு செய்வதில் தயக்கம் காட்டுவது காலத்தைக் களவாடுவது போலத்தான்! 

- எட்வர்டு யங்

ஆயிரம் எதிரிகளைவிட, ஒரு போலி நண்பன் அதிகத் தீங்குகள் விளைவிக்கிறான் 

- பிட்டீ

ஒருமுறை ஏமாறுவது தவறல்ல.... மறுமுறையும் ஏமாறுவது பெரும் தவறு 

- பேக்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com