Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    

    கடி

    By DIN  |   Published on : 23rd May 2020 04:00 PM  |   அ+அ அ-   |    |  

    sm9

    * "ஊர்க்குருவி எவ்வளவு உயரம் பறந்தாலும் பருந்தாக முடியாது தெரிஞ்சுக்கோ!''
    "பருந்து எவ்வளவு பறந்தாலும் ஊர்க்குருவி ஆகாது அதைத் தெரிஞ்சுக்கோ!''
    சு.ஆறுமுகம், கழுகுமலை.

    * "குரங்கு கையில் பூமாலை கிடைச்சா என்ன ஆகும்?''
    இன்னொரு குரங்கு கழுத்திலே போடும்!''
    ஏ.நாகராஜன், பம்மல்.

    * "பாலு தொலைபொருள் ஆராய்ச்சி 
    செஞ்சுக்கிட்டு இருக்கான்!''
    "தொல் பொருள் ஆராய்ச்சின்னு சொல்லு!''
    "இல்லே!.... தொலை பொருள் ஆராய்ச்சிதான்!..... எதையோ தொலைச்சிட்டுத் தேடிக்கிட்டு இருக்கான்!''
    என்.பர்வதவர்த்தினி, சென்னை - 600075

    * "என்னடா இது உன் செருப்பு பெரிசா இருக்கு?''
    "அது 20 பர்சென்ட் எக்ஸ்ட்ரா 
    ஆஃபர்லே வாங்கினதுடா!''
    பொ.பாலாஜி, 11/ 12, ராஜேந்திரா கார்டன், 
    சிவபுரி மெயின் ரோடு, 
    அண்ணாமலைநகர் 608002.

    * "பையன் கேட்டதை வாங்கிக் 
    குடுத்தும் அழறானா?...ஏன்?...என்ன 
    வாங்கிக் குடுத்தே?''
    "மிளகாய் பஜ்ஜி!''
    சரஸ்வதி செந்தில், பொறையார்.

    * "ஐயய்யோ!..... என்னடா இது வீடு ஃபுல்லா கிறுக்கி வெச்சிருக்கே!''
    "நீதானே சொன்னே இது "ட்ராயிங் ரூம்' னு!
    வி.ரேவதி, 68, ராம் நகர், 4 - ஆவது தெரு, மெடிக்கல் காலேஜ் ரோடு, 
    தஞ்சாவூர் - 613007.
    வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
    தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai