அங்கிள் ஆன்டெனா (23/05/2020)

விமானப்படை சில விழாக்களில் விமானங்களைத் தலைகீழாகப் பறக்க விட்டு சாகசங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். அதே போல பறவைகளாலும் தலைகீழாகப் பறக்க முடியுமா?  
அங்கிள் ஆன்டெனா (23/05/2020)

கேள்வி:
விமானப்படை சில விழாக்களில் விமானங்களைத் தலைகீழாகப் பறக்க விட்டு சாகசங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். அதே போல பறவைகளாலும் தலைகீழாகப் பறக்க முடியுமா? 
பதில்: பறவைகள் வானில் பறப்பதைப் பார்த்துத்தான் மனிதன் பறப்பதற்கே பலவிதமான முயற்சிகளைச் செய்து பார்த்துக் கடைசியில் விமானத்தைக் கண்டுபிடித்தான். அதிலும் இப்போது அதிவேகமாக முன்னேறி செவ்வாய் கிரகம், புதன் கிரகம், சூரியன் என்று கூட ராக்கெட் அனுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
பறவைகள் பறப்பதே ஒரு அழகுதான். அவை தலை கீழாகப் பறப்பதற்கு ஒருபோதும் முயற்சி செய்வதில்லை. அது அவற்றுக்கு இயலாத காரியமும்கூட. சில பறவைகள் வேகமாக டைவ் அடிப்பதைப் போலக் கீழே இறங்குவதை எல்லாருமே பார்த்திருப்போம்.
பறவைகளால் தலைகீழாகப் பறக்க முடியாது. இதற்குக் காரணம் அவற்றின் சிறகுகளின் அமைப்புதான். சிறகுகள் ஒன்றின் மீது ஒன்றாக சற்றுத் தள்ளி கூரையில் ஓடு அடுக்கியது போல ஓர் அடுக்காக அமைந்திருக்கும். இந்த அடுக்கின் கீழ் பகுதி வழியே காற்று உள்ளே போவதால் அவற்றின் உடல் மேலும் லேசாகி பறப்பதற்கான மெக்கானிசம் உண்டாகிறது.
பறவைகள் தலைகீழாகப் பறந்தால் என்ன ஆகும்? இந்த சிறகு அடுக்கு அமைப்பு தலைகீழாகும்போது சிறகுகள் அந்த ஒழுங்கான அடுக்கை இழந்து கன்னாபின்னாவென்று விலகி விடுவதால் இந்த மெக்கானிசம் ஒழுங்காக வேலை செய்ய இயலாமல் போய் விடும். 
-ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
தூங்கும் விஷயத்தில் விலங்குகள் எப்படி? 
நம்மைப் போல குறட்டை விடும் விலங்குகள் உள்ளனவா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com