இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா இரயில்!

இந்தியாவின் முதலாவது, இஞ்ஜின் இல்லாது, தானியங்கி முறையில் செயல்படும் எக்ஸ்பிரஸ் இரயில் சென்னை பெரம்பூரில் உள்ள இரயில்பெட்டித் தொழிற்சாலையில் (INTEGRAL COACH  FACTORY) தயாரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா இரயில்!

கருவூலம்
இந்தியாவின் முதலாவது, இஞ்ஜின் இல்லாது, தானியங்கி முறையில் செயல்படும் எக்ஸ்பிரஸ் இரயில் சென்னை பெரம்பூரில் உள்ள இரயில்பெட்டித் தொழிற்சாலையில் (INTEGRAL COACH  FACTORY) தயாரிக்கப்பட்டது.
18 மாதங்களில் உருவான, இந்த அதிவேக இரயிலுக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் "இரயில் 18''. 
பின்னர், ஜனவரி 2019 - இல் இதற்கு "வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ்'' என்று மாற்றுப் பெயர் சூட்டப்பட்டது. நூறு கோடி ரூபாய் செலவில் முற்றிலும் உள்நாட்டின் உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டு, இந்த இரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முதல் சேவை புதுதில்லி முதல் வாரணாசி வரை பிப்ரவரியில் தொடங்கப்பட்டது!
இந்த இரயிலில் எஞ்ஜின் இருக்காது! இரயில் பெட்டியிலேயே இயங்குவதற்கான வசதிகள் இருக்கும்! 
இந்த இரயிலில் முழுமையான குளிர்சாதன வசதி, சுழலும் இருக்கைகள். வைஃபை (WI-FI) வசதி, தானியங்கிக் கதவுகள், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத கழிப்பறைகள், ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் தகவல் மையம், எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இந்த அதிவேக ரயிலை, அதிக பட்சமாக 180 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும. இருப்பினும் தண்டவாளத்தின் வலிமை உள்ளிட்ட பிற விஷயங்களைக் கணக்கில் கொண்டு 130 கி.மீ. வேகத்தில் இயக்க இரயில்வே முடிவு செய்துள்ளது. 
"வந்தே பாரத் இரயிலின் அடுத்த சேவை, புதுதில்லியிலிருந்து, ஜம்மூ, காஷ்மீரில் உள்ள கட்ராவுக்கு 2019, அக்டோபர் - 5 - ஆம் தேதி முதல் இயக்கப்பட்டது. மற்ற இரயில்கள் இந்த வழித்தடத்தைக் கடக்க பன்னிரெண்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். வந்தே பாரத் இரயில் இந்தத் தொலைவை எட்டு மணி நேரத்தில் கடந்துவிடும்!
தொகுப்பு : கோட்டாறு ஆ.கோலப்பன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com