பொன்மொழிகள்(23/05/2020)

நூலறிவைப் பெற்றவன் குளத்தைப் போன்றவன். மெய்யறிவு பெற்றவன் சுனையைப் போன்றவன். 
பொன்மொழிகள்(23/05/2020)

* நூலறிவைப் பெற்றவன் குளத்தைப் போன்றவன். மெய்யறிவு பெற்றவன் சுனையைப் போன்றவன். 
- ஆல்ஜெர்
* நமக்கு சமமானவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையைவிட, நமக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை மிக முக்கியமானது! 
- பிளாட்டோ
* தர்மம் என்பது வேறொன்றும் அல்ல!..... பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதுதான்! 
- விவேகானந்தர்.
* நேரத்தை வீணாக்காதே! வாழ்க்கை என்பதே நேரம்தான்! 
- பிராங்ளின்
* கறை படியாத இதயத்தைவிட உறுதியான மார்புக் கவசம் வேறொன்றும் இல்லை. 
- ஷேக்ஸ்பியர்
* ஒழுக்கமுள்ளவனே உண்மை எது, போலி எது என்பதை உள்ளபடி அறிவான். 
- டால்ஸ்டாய்
* உழைப்பில்லாதவனுக்குக் கிடைக்காத பொருளே "மகிழ்ச்சி' என்பது.
- இங்கர்சால்
* நம் வீட்டு ஒளியும், அடுத்த வீட்டு ஒளியும் ஒன்றோடொன்று உறவாடிக்கொள்கின்றன! எனவே நாமும் அன்புடன் உறவாடுவோம்! 
- சாய்பாபா
* ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு பேரரசை நிறுவுவதைவிடச் சிறந்த செயல்! 
- அரவிந்தர்
* எளிதில் முடியக்கூடிய காரியத்தைக்கூட சோம்பேறித்தனம் காலதாமதமாக்கிவிடும்! 
- புளூடர்க்கி
தொகுப்பு : அ.ராஜா ரஹ்மான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com