ராட்டினக் குதிரை!

 சுத்துது ராட்டினம் சுத்துது! சுத்துது பம்பரம் போலவே! 
ராட்டினக் குதிரை!

 சுத்துது ராட்டினம் சுத்துது!
 சுத்துது பம்பரம் போலவே!
 சுத்துற ராட்டினக் குதிரைகள்
 சீக்கிரம் வா என்றழைக்குது!
 
 பத்திரம்! என்றெனை அம்மாவும்
 பச்சைக் குதிரையில் ஏற்றினாள்!
 சித்திரம் தீட்டிய குதிரையில்
 செய்யப் போகிறேன் சவாரியே!
 
 மின்னலின் வேகமாய் ஓடிட
 ரெக்கைகள் முளைத்துப் பறக்கிறேன்!
 நண்பனும் என்பின்னே வருவதால்
 நெஞ்சினில் தேன்துளி சொட்டுதே!
 
 பின்புறம் தங்கையை ஏற்றியே
 ஊரினைச் சுற்றிக் காட்டுவேன்!
 மன்னனைப் போலவே மாறியே
 நாட்டையும் சுற்றவே போகின்றோம்!
 
 வட்டமாய்ப் பறந்திடும் பறவையாய்
 வானிலே பறக்கவும் போகின்றேன்!
 தொட்டிடத் துரத்திடும் குதிரைகள்
 தோற்றுத்தான் போகுதே என்னிடம்!
 
 பட்டமாய் வானிலே பறக்கின்றேன்
 புன்னகைப் பூக்களைப் பறிக்கின்றேன்
 சட்டென சுற்றியே விட்டிடும்
 ராட்டின மாமா வாழ்கவே!
 ந.பாஸ்கரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com