வாழ்த்திய வயிறு!

அம்மா கொடுத்த காசெல்லாம் அழகன் மிட்டாய் வாங்காமல் சும்மா இருந்த உண்டியலில் 
வாழ்த்திய வயிறு!

அம்மா கொடுத்த காசெல்லாம் 
அழகன் மிட்டாய் வாங்காமல் 
சும்மா இருந்த உண்டியலில் 
சிறுகச் சிறுகச் சேமித்தான்.

ஒருநாள் அப்பா கைப்பிடித்து 
ஓரம் நடந்து செல்கையிலே 
தெருவின் மரத்தடி அடியினிலே 
வறியவர் இருவர் முகங்கண்டான்!

"கரோனா'  காலம் என்பதினால் 
கொடுத்து உதவ யாருமற்று 
வறுமையில் வாடும் அவர்களது 
வயிற்றுப் பசிக்கு வழி கண்டான்.

தின்ன இனிப்பு வாங்கிடவே 
தினமும் சேர்த்த காசுகளை 
உண்ண உணவிலா ஏழைக்கு 
அன்னம் அளித்திட செலவிட்டான்!

முகத்தில் கவசம் அணிந்திட்டான்!
முறையாய் கையைக் கழுவிட்டான்!
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிடவே 
அருகில் உணவகம் சென்றிட்டான்!

உணவுப் பொட்டலம் வாங்கிட்டான்!
உடனே மரத்தடி விரைந்திட்டான்!
உணவை ஏழைக்கு வழங்கிட்டான் 
உண்ட வயிறு வாழ்த்தியதே!

தன்னைப் பற்றி நினைக்காமல்
தளர்ந்து வாடிய வறியவர்க்கு 
அன்னை போல உணவிட்ட 
அழகனை ஊரே மெச்சியது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com