பொன்மொழிகள்

உலகம் ஓர் ஏணி. சிலர் மேலே ஏறுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். சிலர் கீழே இறங்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள். 
பொன்மொழிகள்


உலகம் ஓர் ஏணி. சிலர் மேலே ஏறுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். சிலர் கீழே இறங்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள். 
- மார்க்ஸ்

உண்மை உள்ளத்தூய்மையை உண்டாக்கும். உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. 
- மகாவீர்

வெறுப்பு என்பது அறியாமை பெற்றெடுத்த குழந்தை. 
- வில்லியம் ஹேஸ்விட்

உற்சாகமும், தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். அது மற்றவரையும் அதே போல் செயல்படத் தூண்டும்.  
- என் . வி . பீல்

அறிவாற்றல், நற்பண்பு ஆகியவற்றிற்கு ஏற்றபடிதான் உண்மையான சந்தோஷம் அமையும். 
- அரிஸ்டாட்டில்

தீய பழக்கங்களை விடுவதால், கீழ்த்தரமான மனிதனும் நல்லவனாகிறான். 
- பெஞ்சமின் ஃப்ராங்ளின்

இயற்கை மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். ஆனால் மனிதனின் பேராசையைப் பூர்த்தி செய்யவே முடியாது. 
- மகாத்மா காந்தி

இயற்கை மனிதனுக்கு இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் வழங்கியிருக்கிறது. ஆனால் நாக்கு மட்டும் ஒன்றுதான். ஏனெனில் பேசுவதைக் காட்டிலும், பார்ப்பதும், கேட்பதும்தான் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 
- சாக்ரடீஸ்

நாம் நமது செயல்களைத் தீர்மானிக்கிறோம். நம் செயல்கள் நம்மைப் பற்றிய அபிப்பிராயங்களைத் தீர்மானிக்கிறது. 
- ஜார்ஜ் எலியட்

பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு நிகரேது? 
- மெஹர் பாபா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com