அங்கிள் ஆன்டெனா

இந்தியாவின் தேசியச் சின்னமான அசோகா ஸ்தூபியில் அமைந்துள்ள சிங்கம், காளை, குதிரை, சக்கரம் ஆகியவற்றுக்கு என்ன பொருள்?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: இந்தியாவின் தேசியச் சின்னமான அசோகா ஸ்தூபியில் அமைந்துள்ள சிங்கம், காளை, குதிரை, சக்கரம் ஆகியவற்றுக்கு என்ன பொருள்?

பதில்: இந்தச் சின்னத்தில் 3 சிங்கங்கள் நமது நேரிடைப் பார்வைக்குத் தெரிந்தாலும் இத் தூணில் 4 சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. ஒரு சிங்கம் பின்னால் இருப்பதால் நமது பார்வைக்குத் தெரிவதில்லை. இந்த நான்கு சிங்கங்களும் அதிகாரம், வீரம், தன்னம்பிக்கை மற்றும் பெருமையைக் குறிக்கின்றன.

கீழே உள்ள சக்கரம் தர்ம சக்கரமாகக் கருதப்படுகிறது. எப்பாடு பட்டாவது தர்மம் நிலைநாட்டப்படும் என்பதை இந்தச் சக்கரம் குறிக்கின்றது.

காளை, கடும் உழைப்பையும் நேர்கொண்ட பார்வையையும் குறிக்கின்றது. குதிரை, தேசத்துக்கு உண்மையாக நடப்பதையும் வேகத்தையும் சக்தியையும் குறிக்கின்றது.

இந்தத் தூண் அசோகர் காலத்தில் செதுக்கப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com