முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
By ரூபி | Published On : 10th December 2021 10:13 PM | Last Updated : 10th December 2021 10:13 PM | அ+அ அ- |

மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடம்பிலே தெம்பும், தீவிரமும் உண்டாகும்.
ஒவ்வொருவருக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் அவசியம் வேண்டும்.
அன்பு, கொள்கையில் இருந்தால் போதாது; அது செய்கையில் இருக்க வேண்டும்.
சோர்வும், அதைரியமும் விளைவிக்கக்கூடிய எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம்கொடுக்காதே!
எந்தக் காரியத்தையும் உடனுக்குடன் செய்யும்போது, அதில் பெரும்பாலும் வெற்றி நிச்சயம்.
கைத் தொழிலாலே செல்வம் விளைகின்றது; அது அறிவுத் தொழிலால் சேகரிக்கப்படுகிறது.
நாம், நமக்குத் தோன்றும் உண்மைகளை யாருக்கும் பயந்துகொண்டு மறைக்கக் கூடாது.
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் எடுத்த காரியத்தை உறுதியாக நடத்திச் செல்வதே வீரலட்சணம். அவ்வாறு செய்பவரே
மனிதரில் சிறந்தவர்.
துன்ப நினைவுகள், சோர்வு, பயம் எல்லாம் அன்பில் அழியும். ஆனால் அந்த அன்புக்கு அழிவில்லை.
பக்தியாவது தெய்வத்தை நம்புவது.
கைம்மாறு கருதாமல் பிறருக்கு எந்த விதத்திலாவது செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் "ஈகை' எனப்படும்.
நம்பிக்கை உண்டானால் அங்கே வெற்றி நிச்சயம் உண்டு.