ஒப்புறவு அறிதல்
By | Published On : 18th December 2021 06:00 AM | Last Updated : 18th December 2021 06:00 AM | அ+அ அ- |

அறத்துப்பால் - அதிகாரம் 22 - பாடல் 8
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
- திருக்குறள்
உதவி செய்து வாழ்வதே
கடமை என்று கொண்டவர்
பொருளில்லாத போதிலும்
உதவி செய்யத் தளர்ந்திடார்
தளர்ந்திடாத உள்ளத்தால்
தாராளமாய் உதவிகள்
செய்வதைப் பெரிதாய் எண்ணுவர்
பொருளை ஈட்டிக் கொள்ளுவார்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்