கதைப் பாடல்கள்: எறும்பும்
By கல்லைத் தமிழரசன் | Published On : 18th December 2021 06:58 PM | Last Updated : 18th December 2021 06:58 PM | அ+அ அ- |

கட்டெறும்பு ஓடை நீரில் அடித்துச் சென்றதாம்!
கண்டு பாவம் என்று புறா இலையைப் போட்டதாம்!
சட்டென்றெறும்பு அதனைப் பற்றி ஏறிக்கொண்டதாம்!
தாவிக் கரையின் புல்லைப் பிடித்து உயிர் பிழைத்ததாம்!
வேடன் ஒருவன் வேட்டையாட விரைந்து வந்தானாம்!
வெள்ளைப் புறாவைக் கொல்வதற்கு குறியும் பார்த்தானாம்!
ஓடி வந்து எறும்பு அவன்காலைக் கடித்ததாம்!
வேடன் வில்லைக் கீழே போட்டு "அம்மா' என்றானாம்!
சத்தம் கேட்டுப் புறாவும் மரத்தை விட்டுப் பறந்ததாம்!
சந்தோஷமாய் ஒன்றுக்கொன்று உதவி வாழ்ந்ததாம்!
நித்தம் நாமும் ஒருவர்க்கொருவர் உதவி செய்யுவோம்!
நேயத்தோடு உலகில் என்றும் மகிழ்ந்து வாழுவோம்!