கடி
By | Published On : 25th December 2021 12:00 AM | Last Updated : 25th December 2021 12:00 AM | அ+அ அ- |

""பாட்டி... நான் ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கப் போறேன்... ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்க பாட்டி...''
""ஜாக்கிரதையா... பாத்து மெதுவாக ஓடுப்பா கண்ணு...''
ஏ.பாரூக்,
நெல்லை.
""குளிச்சிட்டு வந்ததும் தலையைத் தொடைன்னு சொன்னேன் என் தம்பி கேக்கல... அதனால அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுச்சு...''
"" நீ ஏண்டா தலையைத் தொடைன்னு சொன்ன... தொடையைத்தானே தொடைன்னு சொல்லணும்...''
சி. விஜயாம்பாள்,
கிருஷ்ணகிரி.
""என் தம்பி ஊதுவத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான்டா... ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகலை...''
""நிஜமாவா? ஆச்சரியமா இருக்கே...''
""ஏன்னா அவன் முழுங்கினது வாழைப்பழமாச்சே...''
உமர்,
கடையநல்லூர்.
""அம்மா... என்னை கடலிலிருந்தா கண்டெடுத்தீங்க...?''
""ஏன்டா முத்து இப்படிக் கேக்கற...?''
""கடலிலிருந்துதான் முத்து எடுக்கறாங்கன்னு எங்க ஆசிரியர் சொன்னாரே...''
ஆர்.சுப்பு,
திருத்தங்கல்.
நான் பாட்டுக் கிளாஸ் போறேன்னு சொன்னா எங்க பாட்டி வேண்டாம்னு குறுக்கே நிக்கறாங்க... வீணை கிளாஸ் போறேன்னு சொன்னாலும் குறுக்கே நிக்கறாங்க... நான் என்னடி பண்ணட்டும் ஷீலா?
""நீ கார் டிரைவிங் கிளாசுக்குப் போ...''
டி.மோகன்தாஸ்
நாகர்கோவில் - 629 001.
""பீச்ல வாக்கிங் போகும்போது எங்க தாத்தாவை குதிரை கடிச்சிடுச்சுடா...''
""அச்சச்சோ... அது கடிக்கற அளவுக்கு அதை அவர் என்ன செய்தார்?''
"கொள்ளு'ன்னு சிரிச்சிருக்கார்...!''
ச.பிரபு,
தேனி - 625 531.