விரட்டாதே!

எங்க வீட்டு தோட்டத்துலஎத்தனையோ மரமிருக்குஅத்தனை அத்தனை மரங்களிலும்
விரட்டாதே!

எங்க வீட்டு தோட்டத்துல
எத்தனையோ மரமிருக்கு
அத்தனை அத்தனை மரங்களிலும்
அழகழகாய் பழமிருக்கு

கொத்திக் கொத்தி தின்றிடவே
கிளைகளில் கிளிகள் அமர்ந்திருக்கு
கொறித்துக் கொறித்து சாப்பிடவே
அணிலும்கூட வந்திருக்கு

விருப்பம்போல சாப்பிடட்டும்
விரட்டி ஓட்ட வேண்டாமே
பசியாறி அவை போனதுன்னா
வாயார நம்மை வாழ்த்திடுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com