பொன்மொழிகள்

நாம் எப்படி அடிமையாக இருக்கக் கூடாதோ, அதே போல எஜமானனாகவும் இருக்க வேண்டியதில்லை. 
பொன்மொழிகள்


நாம் எப்படி அடிமையாக இருக்கக் கூடாதோ, அதே போல எஜமானனாகவும் இருக்க வேண்டியதில்லை. 

- ஆபிரஹாம் லிங்கன்

கடமையைச் செய்யாதவனுக்கு உரிமையைக் கோரும் தகுதியில்லை. 

- டியாரியோ

மெதுவாகப் பேசுவதனால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். நல்ல எண்ணம் நடத்தையைப் பாதுகாக்கும் 

- வள்ளலார்.

கடினமான உழைப்பும் ஒருவகைப் பிரார்த்தனைதான். 

- லால் பகதூர் சாஸ்திரி


யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள். செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள். விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுங்கள். 

- கோல்டன் 


ஞானமும், ஆற்றலும் வேண்டுமானால் தெய்வத்தை வணங்கு.

- வாரியார்.

செய்த தவற்றை ஒப்புக்கொண்டு வருந்தும் மனம் அனைத்து வகை பாவங்களையும் சுத்தம் செய்துவிடும் 

- காந்திஜி.

தெரிந்தவற்றைப் பற்றிச் சிறிது பேசலாம். தெரியாதவை பற்றியோ பேசவே பேசக் கூடாது! 

- பெட்ராண்ட் ரஸ்ஸல் 

முயற்சி செய்யும்போது முட்களும் முத்தமிடுகின்றன. 

- யாரோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com