அங்கிள் ஆன்டெனா
By -ரொசிட்டா | Published On : 27th February 2021 06:00 AM | Last Updated : 27th February 2021 06:00 AM | அ+அ அ- |

கேள்வி: போலீஸ் நாய்கள் மோப்பம் பிடித்து, குற்றவாளியின் இடத்தைக் கண்டுபிடித்து விடுகின்றனவே, நாய்களுக்கு மட்டும் எப்படி இந்த மோப்ப சக்தி?
பதில்: போலீஸ் நாய்க்கு மட்டுமல்ல, பொதுவாகவே "கேனைன்' (இஹய்ண்ய்ங்) குடும்பத்தைச் சேர்ந்த நரி, ஓநாய் போன்ற எல்லா விலங்குகளுக்கும் மோப்ப சக்தி சற்று அதிகமாகவே இருக்கும்.
ஆனாலும், இந்த வகை விலங்குகளில் நாய்களுக்கு மட்டும் இந்த மோப்ப சக்தியை இறைவன் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார்.
வாசனையை அறிவதில் நம்மை விட நூறு மடங்கு அதிகத் திறன் கொண்டவை நாய்கள்.
மிக மிக வாசனை குறைந்த பொருள்களைக் கூட மிக எளிதில் கண்டுகொள்ளக் கூடிய "ஆல்ஃபேக்டரி' என்ற திசுக்கள் நாயின் மூளையில் அபரிமிதமாக இருக்கின்றன.
வாசனையை எளிதில் கண்டுபிடிப்பதற்கு வசதியாக வாயின் மேல் பகுதியில் "ஜெகோப்சென்ஸ்' என்ற பிரத்யேக உறுப்பும் நாய்க்கு உண்டு. அதிகப்படியான காற்றை உள்ளிழுக்க வசதியாக நாசித் துவார அமைப்பும் இருப்பதால், மோப்பம் பிடிப்பதில் கில்லாடிகளாகத் திகழ்கின்றன.
அதிலும் இதற்காக பலவித பயிற்சிகள் எடுத்துக் கொள்ளும் போலீஸ் நாய்கள் கில்லாடிக்குக் கில்லாடிகள்!