கடி

""தினசரி காலண்டர்லே தேதியைக் கிழிக்காதேப்பா!''""ஏன்?''""ஒரு நாள் கூட வீணாகக் கூடாதுன்னு எங்க டீச்சர் சொன்னாங்க!''
கடி

""உலகம் உருண்டை என்று எப்படி நிரூபிப்பாய்?''
""நான் அப்படீன்னு சொல்லவே  இல்லியே சார்!''

உ.அலிமா பீவி,
கடையநல்லூர்.

""தினசரி காலண்டர்லே தேதியைக் கிழிக்காதேப்பா!''
""ஏன்?''
""ஒரு நாள் கூட வீணாகக் கூடாதுன்னு எங்க டீச்சர் சொன்னாங்க!''

பி.சி.ரகு, பள்ளிச்சேரி,
விழுப்புரம் - 605107

""உங்க ஊர்லே லாக்டவுன் இல்லையா?''
""எங்க ஊர் கிராமத்திலே இருக்கு,.... அதனாலே "லாக் வில்லேஜ்'னு 
நெனைக்கிறேன்!''

ஆர் . சுப்பு, திருத்தங்கல்.

""எங்க ஊரிலே இப்போ கரோனா இல்லை!... ஆனா பக்கத்து ஊரிலே  கரோனா அதிகமாயிடுச்சு!''
""ஓ!... இதுதான் "ஊரு மாறிய' கரோனாவா?''

ஆர் . ஜே . ஜெய்ஹரிதா
திசையன்விளை - 627657

""அவரு யாரு?''
""அவர் எங்க சீஃப்!''
""அவரு பேரு?''
""அவுரங்கசீப்!''

கோ.சாய்லட்சுமி,
கிருஷ்ணாபுரம்.

 ""ஏண்டா பதிலே சொல்ல மாட்டேங்கறே? வாயிலே என்ன கொழுக்கட்டையா?''
""ஆமாண்டா!.... எப்படிக் கண்டுபிடிச்சே?''

இசைவாணி,
பாளையங்கோட்டை - 627002.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com