முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
விடுகதைகள்
By DIN | Published On : 12th June 2021 04:34 PM | Last Updated : 12th June 2021 04:34 PM | அ+அ அ- |

1. ஊர், உலகம் உறங்கினாலும் இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்...
2. நான்கு கால்கள் கொண்டவன், ஆனால் இவனுக்கு வால் கிடையாது...
3. இந்தச் சின்னப் பையனின் வாலுக்கு உலகமே நடுநடுங்கும்....
4. கடல் நீரினால் வளருவான், மழை நீரினால் காணாமல் போவான்...
5. பாடுவான் ஆட மாட்டான், பேசுவான் அசைய மாட் டான்...
6. கைக்குள் அடங்கும் இந்தப் பிள்ளை கதை நூறு சொல்லுவான்...
7. ஊளையிடும் ஊரைச் சுமக்கும்...
8. உலகில் மெலிந்தவன், உடுப்பைக் காப்பவன்...
விடைகள்
1. கடிகாரத்தின் சின்ன முள், பெரிய முள்
2. நாற்காலி
3. தேள்
4. உப்பு
5. ரேடியோ பெட்டி
6. புத்தகம்
7. இரயில்
8. தையல் ஊசி