பழிக்குப் பழி!

வழக்கம் போல் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கீழே புதைத்திருந்த கழியில் கன்றைக் கட்டினாள் அலமு.
பழிக்குப் பழி!


வழக்கம் போல் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கீழே புதைத்திருந்த கழியில் கன்றைக் கட்டினாள் அலமு. பிறகு பசுவிடமிருந்து சொர்....சொர்...என்ற சத்தத்துடன் பாலைக் கறந்து ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டிருந்தாள் அலமு.

பக்கத்து வீட்டு வெள்ளைப் பூனை ஒன்று கொல்லைச் சுவற்றின் மேலிருந்து தொப்பென்று கீழே குதித்தது. கறவைப் பசுவின் அருகில் கட்டப்பட்டிருந்த அந்தக் கன்றின் அருகில் சென்று தரையில் தன் கால்களின் நகங்களால் தரையைக் கீறியது. பின், வாலைக் குழைத்துக்கொண்டு கன்றிடம் பாய்ந்து விளையாடியது. கன்றோ அங்குமிங்கும் நகர்ந்தது. இதனைக் கண்ட பசுவோ, தனது வாலைச் சுழற்றிச் சுழற்றி அசைத்து, பால் கறந்து கொண்டிருந்த அலமுவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.

உடனே கோபமடைந்த அலமு, தன் அருகில் கிடந்த கோல் ஒன்றை எடுத்து "நச்' என்று அந்தப் பூனையின் மீது  ஓர் அடி அடித்தாள். அடி வாங்கிய பூனை, வலியுடனும், அதிர்ச்சியுடனும் குதித்தோடி மதில் சுவர் வழியே தன் வீட்டுக்குச் சென்று விட்டது. 

"கன்றுடன் விளையாட மட்டுமே செய்த தன்னை, இப்படி வலிக்குமாறு அடித்துவிட்டாளே அந்த அலமு' என்று எண்ணிப் பொருமியது அந்தப் பூனை. "அடித்துத் துரத்திய அலமுவைத் தன்னால் அடிக்க முடியாது..... ஆனால் அவளைத் தண்டிக்கும் வகையில், அவள் பால் கறந்து வைத்திருக்கும் பாத்திரத்தைப் பாய்ந்து தள்ளி, பால் முழுவதையும் தரையிலே கொட்டச் செய்துவிடவேண்டும். அப்போதுதான் தன் ஆத்திரம் அடங்கும்'  என்று எண்ணியது அந்த வெள்ளைப் பூனை. 

அலமு மறுநாள் காலை பால் கறந்து கொண்டிருந்தாள்.  சிறிய பாத்திரத்தில் கறந்து, பெரிய பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டிருந்தாள். வெள்ளைப் பூனை மதிலின் முனையில் அமர்ந்து கொண்டு அலமுவின் கண்களில் படாமல் பார்த்துக் கொண்டிருந்தது. பெரிய பாத்திரமும் நிரம்பிவிட்டது!

அலமு பால் நிறைந்த பாத்திரத்தை அருகில் வைத்துவிட்டு கன்றினை  பசுவிடம் ஊட்ட விடுவதற்காக அவிழ்த்து விட்டாள். அந்த நேரம் பார்த்து மதிலில் வேக நடை போட்டு விரைந்து வந்தது அந்த வெள்ளைப் பூனை. பாத்திரத்தைக் கவிழ்த்து விட நினைத்து பாயத் தயாரானது. அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நாய் ஒன்று, "வவ்... வவ்....' என்று சினத்துடன் குரைத்து, அந்த மதிலை நோக்கித் தாவியது. அச்சத்தில் நிலை குலைந்த பூனை மதிலின் மறுபுறத்திலிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்தது! நல்லகாலம் குளத்தில் தண்ணீர் இல்லை! ஆனால் பூனைக்கு பலத்த அடி! வலியால் துடித்தது! "பழிவாங்க நினைப்பது தவறான எண்ணம்'   என்பதை உணர்ந்து கொண்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com