கருவூலம்

சூரிய கிரகணத்தைத்தான் இப்படி கதிரவ மறைப்புன்னும் சொல்றாங்க.... சரி, சூரிய கிரகணம் எப்படி ஏற்படுது? ரொம்ப சிம்பிள்! அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவிலே சந்திரன் வந்துடறாரு!
கருவூலம்

கதிரவ மறைப்பு!

சூரிய கிரகணத்தைத்தான் இப்படி கதிரவ மறைப்புன்னும் சொல்றாங்க.... சரி, சூரிய கிரகணம் எப்படி ஏற்படுது? ரொம்ப சிம்பிள்! அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவிலே சந்திரன் வந்துடறாரு! அதுவும் ஒரே நேர்கோட்டிலே! அதாவது, முறையே சூரியன், சந்திரன், பூமி இப்படி! நடுவிலே சந்திரன் வர்றதாலே அவரோட  நிழல் பூமியின் மேலே விழுந்துடுது! சந்திரன் பூமிக்கு ரொம்ப கிட்டே இருக்கறதாலே சூரியனை மறைச்சுடறார்! இவ்வளவுதான் சூரிய கிரகணம்! எப்பவும் அமாவாசை அன்னைக்குத்தான் இந்த சூரிய கிரகணம் நடக்கும்! ஏன்னா அப்போதான் சந்திரனோட  நிழல் பகுதி நமக்கு முழுசாத் தெரியும்!

ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டுச்சு! இந்த கிரகணம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்! முழுசா நிலா சூரியனை மறைக்கும் போது அதோட விளிம்பில் சூரியனோட ஒளி அழகா ஒரு மோதிரம் மாதிரி தெரியும்! கற்பனை பண்ணவே ரொம்ப சுவாரசியமா இருக்கா! 

ஆனா இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலே அருணாசலபிரதேசத்தில் மட்டும் ஒரு பகுதியாகத்தான் தெரியும். கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற இடங்களில் இந்த மோதிர வடிவம் தெரிந்திருக்கும்! சில இடங்களில் சூரியனைக்  கொஞ்சம் கடிச்சா மாதிரி சூரிய கிரகணம் தெரியும்!  இந்திய நேரப்படி பிற்பகல் 1.42  மணிக்கு ஆரம்பிச்சு பிற்பகல் 6.41  வரைக்கும் கிரகணகாலம்! கிரகணத்தை வெறும் கண்களாலே பார்க்கக்கூடாதுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. பாதுகாப்பான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்க்கணுமாம்! இந்த வருடம் டிசம்பர் மாதம் 4 - ஆம் தேதி காலை 10 -59 முதல் பிற்பகல் 15-07 வரை இன்னொரு சூரிய கிரகணம் வருது!  

பூமிக்கு கல்லெறிந்த வால் நட்சத்திரம்!

வெஸ்டான்னு ஒரு சிறு கோள்! இங்கிலீஷ்லே அஸ்ட்ராயிடுன்னு சொல்லுவாங்க....326 மைல் விட்டம் இருக்கிற ஒரு கோள் அது!  அதுபாட்டுக்கு தேமேன்னு வியாழன் கிரகத்திற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மத்தியிலே சுத்திக்கிட்டு இருந்திச்சு! சுமாரா 2 கோடியே 30 லட்சம் வருடத்துக்கு முன்னாலே திடீர்னு  வெடிச்சுது! அதிலேயிருந்து ஒரு  பெரிய விண்கல் சிதறி பால்வெளியிலே தாறுமாறா சுத்திச்சு! அதுக்கப்புறமா விண்வெளியிலே சுத்திக்கிட்டிருந்த வேறே ஒரு விண்கல்லோட டமால்னு மோதிச்சு! மோதினதும் மறுபடியும் சிதறி பால்வெளியிலே பாதை மாறி தாறுமாறா சுத்திக்கிட்டு இருந்திச்சு! 

2018 - ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரிúஸானா ஸ்கை சர்வே டெலஸ்கோப் வழியா ஒரு விஞ்ஞானி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போ இந்த விண்கல் வேகமா வருவதை கவனித்துவிட்டார். வேகம்னா எவ்வளவு தெரியுமா? மணிக்கு 37,000 மைல்!  

ஒரு வழியா பால்வீதியிலே திசைமாறிச், சுத்திக்கிட்டிருந்த அந்த வெஸ்டா கோளின் சிறிய துண்டு வானில் மிகப் பிரகாசமாய் எரிந்தது! பிறகு தெற்கு ஆஸ்திரேலியாவின் போட்ஸ்வானா என்னும் இடத்தில், 2018 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம்தேதி அதன் கற்கள் மோதிச்  சிதறின! அமெரிக்க விஞ்ஞானிகள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை சந்தித்தனர். அவர்கள் டெலஸ்கோப்பில் பார்த்த காட்சியைப் பற்றித் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளும் அந்த சம்பவத்தின் காணொலிகளைக் காண்பித்தனர்.  அந்தக் காட்சி சென்ட்ரல் காலஹரி கேம் ரிசர்வ் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது! தற்போது அந்தப் பகுதியில் 24 சிதறிய  சிறு கற்கள் தென்பட்டன!  அந்தக் கற்கள், சிறு கோளான  வெஸ்டாவினுடையது என்பதை உறுதி செய்துள்ளனர்.  நல்ல காலம்! யாருக்கும் உயிர்சேதம் இல்லாம பத்திரமாத்தான் விழுந்திருக்கு! வெஸ்டாவுக்கு தேங்ஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com