முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 12th June 2021 04:36 PM | Last Updated : 12th June 2021 04:36 PM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கோதுமை மூலம் கிடைக்கும் உணவுப் பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. அரைக்க அரைக்க நறுமணம் தரும்...
2. குப்பை சேராமல் இருக்க இது பயன்படும்...
3. இந்த இடத்துக்குச் சென்றால் தாகம் நிறைய ஏற்படும், ஆனாலும் நீர் கிடைப்பது கஷ்டம்...
4. இது அறிவாற்றலை வளர்க்க உதவும்...
5. கல்யாணம் என்பதற்கு மற்றொரு சொல்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. சந்தனம்,
2. துடைப்பம்,
3. பாலைவனம்,
4. புத்தகம்,
5. திருமணம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : சப்பாத்தி