"ர' கரமும்,  "ற' கரமும் அறிவாய்!

"ர' கரம், "ற' கரம் மாறி, மாறி வருமே உரையில்... பாட்டில்!
"ர' கரமும்,  "ற' கரமும் அறிவாய்!


"ர' கரம், "ற' கரம் மாறி, மாறி 
வருமே உரையில்... பாட்டில்!
தெரிந்து, புரிந்து பேசிப் பழகு
சிரமம் இல்லை தம்பி!

அறிவை வளர்க்கும் அரிய கல்வி
அருளும் பள்ளி அருகில்
சிறிய, பெரிய உருவில் மரங்கள் 
சிறந்த முறையில் வளரும்.

கரையும் காகம், குருவி போன்ற 
பறவை இரையைப் பெறுமே!
மருந்தும், விருந்தும் வழங்கும் மரத்தை 
மறந்தும் வெட்ட வேண்டாம். 

பரிதி ஒளியை வாங்கித் தரையில் 
பகலில் வரையும் நிழலை
எரியும் வெயிலில் தெருவில் திரியும் 
எவரும் பெறுவர் குளுமை!

உரமும், திறமும், தரமும் வாய்ந்த 
மரங்கள் இயற்கை வரங்கள்!
இரங்கும் மழையை கிறங்க வைக்கும் 
மரங்கள் காந்தக் கரங்கள்!

விறகுக்காக வெட்டினாலும் 
பிறகும் பொறுமை காக்கும்!
அருமை, பெருமை அறிவதோடு 
நிறைய மரங்கள் வைப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com