விடுகதைகள்

இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல். யார் இவர்கள், என்ன அது?


1. இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல். யார் இவர்கள், என்ன அது?

2. பரந்து விரிந்த வயல்வெளியில் விதைத்த நெல் மணிகள். இது என்ன?

3. இருட்டில் இவன் கண் சிமிட்டுவான், ஆனால் நட்சத்திரம் அல்ல....

4. இவனுக்குக் கைகள் கிடையாது. துடுப்பும் கிடையாது, ஆனாலும் கடலில் நீந்திக் கரை சேருவான்....

5.  எண்ணம்தான் விதை. அறுவடையோ வண்ணமயம்...

6. இவன் ஊருக்கெல்லாம் சேதி சொல்வான்... ஆனால் அதற்கு முன் நன்றாக உதை வாங்குவான்...

7. உருவமே இல்லாத ஒருவன் உலகெங்கும் உலவித் திரிகிறான்...

8. சொட்டச் சொட்ட நனைந்தாலும் இவனுக்கு நடுக்கமே வராது....


விடைகள்


1.  தேன் கூடு, தேனீக்கள்  
2. நட்சத்திரங்கள்  
3. மின்மினிப்பூச்சி
4. கப்பல்    
5.  ஓவியம்  
6.  தண்டோரா
7.  காற்று  
8.  குடை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com