காந்தியும் சிறுவனும்!

காந்தியைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்தான் ஒரு சிறுவன். அவனுக்கு அவரைப் பார்க்க மிகவும் ஆவலாய் இருந்தது. ஒரு நாள் காந்தியும் அந்த சிறுவன் இருந்த ஊருக்கு வர நேரிட்டது.
காந்தியும் சிறுவனும்!

காந்தியைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்தான் ஒரு சிறுவன். அவனுக்கு அவரைப் பார்க்க மிகவும் ஆவலாய் இருந்தது. ஒரு நாள் காந்தியும் அந்த சிறுவன் இருந்த ஊருக்கு வர நேரிட்டது. சிறுவன் காந்தியின் வருகையைக் கேள்விப்பட்டான். அவனுக்கு ஒரே குஷி! ஓடோடிச் சென்று அவரைப் பார்த்தான்!
மேல் சட்டை இல்லாமல் ஒரு வேட்டியை மட்டும் அணிந்திருந்தார் காந்தி! இவ்வளவு பெரிய தலைவருக்கு ஒரு சட்டைகூட இல்லையா என்று நினைத்தான். அவரைப் பார்த்த அந்த சிறுவனுக்கு காந்தியின் மீது இரக்கம் ஏற்பட்டது!
""என்ன நீங்க?... இப்படி சட்டையே இல்லாம இருக்கீங்க?'' என்று கேட்டான்.
""எனக்கு அவ்வளவு வசதியில்லையேப்பா! நான் ரொம்ப ஏழை!... என்னாலே சட்டையெல்லாம் வாங்க முடியாது!!'' என்று குனிந்து புன்முறுவலுடன் சிறுவனிடம் கூறினார் காந்தி.
""எங்கம்மா நல்லா சட்டை தைப்பாங்க.... நான் வேணும்னா உங்களுக்கு ஒரு சட்டை தைத்துத் தரச் சொல்லவா?''
""வேண்டாம்ப்பா.... என் குடும்பம் பெரிசு அதிலே பலபேர் சட்டையில்லாமத்தான் இருக்காங்க!... நான் மட்டும் எப்படி சட்டை போட்டுக்கறது!... நியாயமா?.... நீயே சொல்லு!''
""அப்படியா!.... அடப்பாவமே!... உங்க குடும்பத்திலே எல்லாருக்கும் எங்கம்மாவை சட்டை தைத்துத் தரச் சொல்றேன்!..... கவலைப்படாதீங்க!....
எவ்வளவு வேணும்?''
""உன்னால் முடியாது நிறைய வேணும்ப்பா!''
""நீங்க சொல்லுங்க அஞ்சு சட்டை போதுமா?''
""போதாது!''
""பத்து!''
""ம்ஹூம்.... போதாது!... ''
""போதாதா?.... அது என்ன உங்க குடும்பம் அவ்வளவு பெரிசா?..... நீங்க எத்தனை பேர் இருக்கீஙக?''
""என் குடும்பத்திலே சுமார் நாற்பது கோடிபேர் இருக்காங்க!..... அதிலே பல கோடி பேர் சட்டையே இல்லாம இருக்காங்க...''
""அவ்வளவு பேரா? அடேங்கப்பா!....அப்பன்னா இந்த தேசத்திலே இருக்கிற எல்லாருமே உங்க குடும்பமா?...''
""ஆமாண்டா செல்லம்!...''
""இந்த தேசத்தையே உங்க குடும்பமா நினைக்கிறீங்க!.... ஆச்சரியமா இருக்கு! உங்களை வணங்கறேன் தாத்தா!''
சிறுவனின் தலையில் கையை வைத்து ஆசி வழங்கினார் காந்தி.
சிறுவனின் நெஞ்சில் தேச பக்தியின் விதை விழாமலிருக்குமா?

(இன்ஸ்பைரிங் ஸ்டோரீஸ் இன் காந்திஸ் லைஃப் - தொகுப்பிலிருந்து...)

அட்டை ஓவியம் : நன்றி தேசி கம்மெண்ட்.காம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com