அங்கிள் ஆன்டெனா

கண்கொத்திப் பாம்பு சரியாக கண்களைப் பார்த்துக் கொத்துமாமே? அப்படி ஒரு பாம்பு இருக்கிறதா?
அங்கிள் ஆன்டெனா


கண்கொத்திப் பாம்பு சரியாக கண்களைப் பார்த்துக் கொத்துமாமே? அப்படி ஒரு பாம்பு இருக்கிறதா?

இருக்கிறது.... இல்லை.... எப்படி வேண்டுமானாலும் கூறலாம். செடிகொடி புதர் நிறைந்த பகுதிகளில் வாழும் இந்தப் பாம்பு க்ரீன்விப் ஸ்நேக் (Greenwhip snake) என்று அழைக்கப்படுகிறது. பச்சை சாட்டைப் பாம்பு என்றும் கூறலாம். சாட்டை போலவும் பச்சை நிறத்திலும் இது இருக்கும்.

இதற்குக் கோபம் வந்துவிட்டால், உடலை நீட்டி விரைத்துக் கொள்ளும் (ஒரு ஸ்பிரிங் போல). அப்போது எதிரியை நோக்கி வேகமாகப் பாயும். பளபளப்பான 
எந்தப் பொருளைப் பார்த்தாலும் இந்தப் பாம்பு அதைக் குறிவைத்துத் தாக்கும்.

எதிரியிடம் மிகவும் பளபளப்பான பகுதி எது? எல்லா உயிரினங்களுக்கும் கண்கள்தான் எப்போதும் ஈரப்பசையுடன் பளபளவென்று காட்சி தரும்.  ஆகவே, இந்தப் பாம்பின் குறி அந்தப் பளபளப்பை நோக்கித்தான் இருக்கும். ஆகவேதான் இது பெரும்பாலும் கண்களை நோக்கிப் பாய்ந்து தாக்குகிறது.

மற்றபடி, குறி பார்த்துக் கண்களைத்தான் தாக்க வேண்டும் என்ற சாபமோ குறிக்கோளோ இதுற்குக் கிடையாது. கையிலோ, தலையிலோ உடலிலோ வேறு ஏதாவது பளபளப்பான பொருள் இருந்தாலும் அதையும் நோக்கி இதன் குறி இருக்கத்தான் செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com