விடுகதைகள்

நீரிலும் வாழும் மீன் அல்ல, நிலத்திலும் வாழும் மான் அல்ல... கொம்புகள் இரண்டு உண்டு...


1. நீரிலும் வாழும் மீன் அல்ல, நிலத்திலும் வாழும் மான் அல்ல... கொம்புகள் இரண்டு உண்டு...
2. தனது தலையைத் தானே விழுங்கும், இவன் யார்?
3. வெளுக்காத போர்வை, வெள்ளையாக இருக்கும்; நிரப்பாத குடம், நிறைந்தே இருக்கும்...
4. மெதுவாய்த் துடுப்பு நான்கு தள்ளி வர, விதானத்துக்குள் சீமாட்டி அமர்ந்து வருகிறாள். யார் இவள்?
5. நாணல் புதருக்கு நடுவே துள்ளி ஓடுது சிறு படகு...
6. ஒரு கோப்பை பசும்பால், ஊரெல்லாம் பெருகிடுமாம்...
7. சின்னஞ்சிறு அறைகளுக்குள் சிறப்பாக வாழ்ந்திடுவர்... கருப்பும் சிவப்பும் அணிந்த உடை அணிவர்... கவலையில்லாதவர்கள்... சுவைத் திரவம் தருபவர்...
8. எத்தனை அடி விழுந்தாலும் இம்மியும் வலிக்காது
இவனுக்கு...


விடைகள்

1. நத்தை
2. ஆமை
3. தேங்காய்
4. ஆமை
5. நெசவு நாடா
6. முழு நிலவு
7. தேனீ
8. மேளம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com