அங்கிள் ஆன்டெனா
By -ரொசிட்டா | Published On : 09th October 2021 06:00 AM | Last Updated : 18th October 2021 10:04 PM | அ+அ அ- |

கேள்வி: "ஆள்காட்டி பறவை' என்று ஒன்று இருக்கிறதாமே? உண்மையா?
பதில்: தனக்கு மிகவும் பிடித்தமானவர்களைப் பாதுகாப்பதில் மனிதன் மிகவும் கில்லாடிதான். மனிதனை விடவும் கில்லாடியாக ஒன்று இருக்கிறது என்றால் அது ஆள்காட்டிப் பறவைதான்.
இந்தப் பறவை தான் இருக்கும் இடத்தையே மிகவும் பாதுகாப்புள்ளதாக இருக்கும்படிப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும். யார் கண்ணிலும் படாதபடி மிகவும் பந்தோபஸ்தாக இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ளும்.
தனது இடத்துக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு நண்பன் பறவையைக் காவலுக்கு வைத்துக் கொள்ளும். (இது காவலுக்கு இருக்கும் தனது நண்பனுக்கும் காவலாளியாக வேலை பார்க்கவும் செய்யும். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள்)
தங்களது இடத்துக்கு அருகில் யாராவது வருகிறார்கள் என்றால் காவலுக்கு இருக்கும் அந்தப் பறவை கீச் கீச் என்றோ காச் மூச் என்றோ கத்த ஆரம்பிக்கும். தனது கூட்டுக்குள் இருக்கும் பறவை சுதாரித்துக் கொள்ளும்.
இந்தச் செயல்பாட்டிற்காகத்தான் இந்தப் பறவைக்கு ஆள்காட்டி பறவை என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.