அங்கிள் ஆன்டெனா

நம்மைப் பார்த்தாலே பயந்து ஓடும் எலிகளுக்கு ஏதாவது விசேஷ சக்தி இருக்கிறதா?
அங்கிள் ஆன்டெனா


நம்மைப் பார்த்தாலே பயந்து ஓடும் எலிகளுக்கு ஏதாவது விசேஷ சக்தி இருக்கிறதா?

பதில்: நிலத்துக்கு அடியில் நம்மால் சிறிது நேரம்கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் எலிகளுக்கு இயற்கை சில ஸ்பெஷல் சக்திகளைத் தந்திருக்கிறது. எலிகள் வளை தோண்டுவதில் கில்லாடிகள்.

அதுவும் இந்திய எலிகளை விட அமெரிக்க எலிகள் கில்லாடிக்குக் கில்லாடிகள். அங்கு வாழும் கோப்பர் காஃபர் என்ற எலி இனத்தைச் சேர்ந்தவை மிக வேகமாக வளை தோண்டக்கூடியவை.

ஒரே இரவில் 300 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி விடும். இது ஒரு சுரங்கப்பாதை போலச் செல்லும். இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் இருக்கும் வீட்டில் பல அறைகள் இருக்குமாம்.

அந்த அறைகளில் ஒன்று டாய்லெட் என்று கூறுகிறார்கள். இது ஆச்சரியமாக இல்லை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com