கடி

""ஆறுக்கு அடுத்து என்னடா?''""ஆற்றங்கரை தான்...இது கூட  தெரியாதா?''
கடி

""ஆறுக்கு அடுத்து என்னடா?''
""ஆற்றங்கரை தான்...இது கூட  தெரியாதா?''

 ஏ.நாகராஜன்,
பம்மல்

""வாடா,... ஏதாவது  லைட்டா சாப்பிடலாம்!''
""லைட்டை  சாப்பிட நான் என்ன 
தாவரமா?''

இர . கிருத்திக் குமார்,
நெய்வேலி.

""என்னடா,  இன்னைக்கு  ஹோம் ஒர்க் உங்க அப்பா கையெழுத்து மாதிரி இருக்கு?....''
"" அப்பாவோட பேனாவால எழுதுனேன் அதான்!...''

எஸ் . பிரபுராஜா, 
மதுரை - 625002

"" நாளைக்கு சினிமாக்கு போறேன். 
வரியாடா?'' 
""முடிஞ்சா வரேன்'' 
"" முடிஞ்ச பின்னாடி , எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு!''

ஆர் சுந்தரராஜன்,
சிதம்பரம்-608001.

 ""இதுதான் எங்க செல்ல நாய் டாமி!''
""மோப்பம் பிடிக்குமா?''
"" ம்ஹூம்,.... அதுக்கு ஆப்பம்தான் பிடிக்கும்!''

அ. பேச்சியப்பன், 
ராஜபாளையம் - 626117

""என்னடா வர வர பாடத்தில் மதிப்பெண் குறைந்து கொண்டே வருது?...''
""நீங்க தானே சார் மதிப்பெண் போடுறீங்க!...''

சீ.காந்திமதிநாதன்,
கோவில்பட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com